இயேசு நடந்த இடங்களில் நானும்! எழுதியவர்: பேசும் பொம்மைக் கலைஞர் ஜார்ஜ் ஷாந்தகுமார் (கைப்பேசி 94441 48832) கடந்த ஒரு வருடமாக என் குடும்பத்தினரைப் புனித பயணத்துக்காக இஸ்ரவேல் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் வாக்களித்திருந்தேன். அதனை ஏற்பாடு செய்ய பல பயண நிறுவனங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. ஆனால் அவற்றுள் ஓயாசிஸ் எனும் நிறுவனமே சிறந்தது எனக் கேள்வி பட்டு, பத்து நாள் பயணத்துக்காக, என் பத்து குடும்பத்தினருக்கும் (தலா ரூ.85,000 வீதம்) பணம் செலுத்தினேன். அவர்கள் விமானப் பயணச் சீட்டு, ஜோர்டான், இஸ்ரவேல், எகிப்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் விசா, தங்குவதற்கு விடுதி, உணவு என்று அனைத்து செலவுகளையும் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். எங்கள் குடும்ப நண்பர், திரு. தானியேல் பாஸ்கரன் அவர்கள் இது வரை மூன்று முறை புனித பூமிக்கு சென்று வந்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னது… “இந்தக் கம்பெனிதான் பெஸ்ட். காரணம், ஒரு ஆளுக்கு நீங்கள் கட்டும் பணம் மிகக் குறைவு. மேலும், நீங்க தங்கப் போகிற லாட்ஜ் எல்லாமே 3 ஸ்டாருக்கு மே...
Posts
Showing posts from June, 2017