இயேசு நடந்த இடங்களில் நானும்!
எழுதியவர்:
பேசும் பொம்மைக் கலைஞர்
ஜார்ஜ் ஷாந்தகுமார்
(கைப்பேசி 94441 48832)
அவர்கள் விமானப் பயணச் சீட்டு, ஜோர்டான், இஸ்ரவேல், எகிப்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் விசா, தங்குவதற்கு விடுதி, உணவு என்று அனைத்து செலவுகளையும் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள்.
எங்கள் குடும்ப நண்பர், திரு. தானியேல் பாஸ்கரன் அவர்கள் இது வரை மூன்று முறை புனித பூமிக்கு சென்று வந்திருக்கிறார்கள். அவர்கள் சொன்னது…
“இந்தக் கம்பெனிதான் பெஸ்ட். காரணம், ஒரு ஆளுக்கு நீங்கள் கட்டும் பணம் மிகக் குறைவு. மேலும், நீங்க தங்கப் போகிற லாட்ஜ் எல்லாமே 3 ஸ்டாருக்கு மேலே. சாப்பாடு எ ஒன். தினமும் 2 பாட்டில் தண்ணீர் ஃப்ரீ. மேலும் எங்கையுமே நுழைவுச்சீட்டு வாங்க பணம் கொடுக்கத் தேவையில்லை.
“மத்த கம்பெனி மூலமா போனா, தண்ணிக்கும், நுழைவுச் சீட்டுக்கும் நீங்க காசு கொடுக்கணும். மொத்தத்தில நீங்க பர்ஸை எடுக்கவே தேவையில்லை. யாருக்காவது பரிசுப் பொருள் வாங்கணும்னா மட்டுமே, உங்க பர்ஸைத் திறக்கணும்!” வாவ்!
😝 ஓயாசிஸ் அலுவலகத்திற்கு வந்த ஒருவரிடம் பேசினேன். "நான் ப்ராடெஸ்டண்ட்... நீங்க?"
அவர், "நான் கத்தோலிக்கன். நம்ப ரெண்டு பிரிவும் சீக்கிரமா சேந்துடும்!"
நான்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?
அவர்: அதா, மோடிஜி வந்துட்டாரில்ல!
|
இதற்கு மானியமாக தமிழ் நாடு அரசு ஒருவருக்குத் தலா ரூ.20,000 கொடுக்கிறார்கள். ஆனால் 10 பேருள்ள எங்கள் குழுவில் உள்ள இருவருக்கே மானியம் கிடைத்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சர்வ சாதாரணமாக கிடைத்த மானியம், இப்பொழுது சிபாரிசு, லஞ்சம் போன்ற காரணங்களால் அனைவருக்கும் கிடைக்காத எட்டாக் கனியாயிற்று!
(ஜானி எனும் என் பேசும் பொம்மை: சாத்தான் புனித யாத்திரை செய்யும் கிறித்தவர்களையும் சோதிக்காமல் விட்டு வைப்பதில்லை. இப்பாவத்திற்கும் சேர்த்து புனித பூமியில் மன்னிப்பு பெறட்டும் என்று நினைக்கிறான் போலும்!)
நான்: இயேசு நம் நாட்டில் பிறக்காமல் ஏன் இஸ்ரவேலில் பிறந்தார், ஜானி?
ஜானி: உலக வரைப் படத்தில் அந்நாடு ஏறக்குறைய மையப்பகுதியில் அமைந்துள்ளது காரணமாக இருக்கலாம் அங்கிள்!
நான்: கிறித்தவ மதம் மேற்கத்திய வளர்ந்த நாடுகளின் மதம் என்றும், அதை வளர்ந்து வரும் நாடுகள் மீது அவர்கள் திணிக்கிறார்கள் என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே.
ஜானி: உண்மையில், இஸ்ரவேல் ஒரு ஆசிய நாடு! இங்கிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு பரவிய மதம்தான் கிறித்தவம்.
நான்: எங்க எல்லாருக்கும் ஒரு சிவப்பு தொப்பியும், கழுத்தில மாட்டிக்கிற ஐ.டி. கார்டும் ஓயாசிஸ் ஓசியில கொடுத்தாங்க. அது அவுங்க விளம்பரத்துக்காகத்தானே?
ஜானி: அது மட்டுமல்ல அங்கிள்! நீங்களும் இந்தக் குழு ஆள்தான்னு அடையாளம் காட்டவும் உதவுது!
3.5.2017:
51 நபர்கள் அடங்கிய எங்கள் குழுவைக் காலை 9.50 மணியளவில் எமிரேட்ஸ் விமானம் துபாய்க்கு ஏற்றிச் சென்றது. துபாயின் விமான நிலையத்தில் வேடிக்கை பார்க்க குடும்பத்துடன் சென்றோம். அங்கு விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருந்த காருக்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம்.
துபாயிலிருந்து மதியம் 2 மணிக்கு மற்றொரு விமானம் மூலம் புறப்பட்டு, ஜோர்தானின் தலைநகராகிய அம்மானை மாலை 4.10 மணிக்கு சென்றடைந்தோம். 5.30 மணிக்கு 'எருசலேம்' எனும் விடுதிக்கு சென்று விட்டோம். (ஜானி: இந்த அம்மான் வேறு! நம்ப நாட்டு அந்தமான் வேறு! வீணா குழப்பிக்காதீங்க!)
அங்குள்ள கடைகள் அசத்தலாயிருந்தன. ‘செம’!
சாக்லேட்டுகளும், விளையாட்டு பொருட்களும், அழகு சாதனங்களும் மரச்சட்டத்தால்
செய்யப்பட்ட ரேக்குகளை அலங்கரித்தன.
விலையைப் பார்க்க அப்பொருட்களைத் தொட்டால் அது நம்மைச் சுட்டது. அவ்வளவு விலை!
நாங்கள்
விலையைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கும்போது என் பேரப் பிள்ளைகள் மூவரும்
விளையாட்டுப் பொருட்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அடுத்த கடைகளுக்கு முன்னேறினோம். திடீரென்று பார்த்தால், மூன்று பிள்ளைகளையும்
காணோம். இன்னும் அரை மணி நேரத்தில் அடுத்த
விமானத்தைப் பிடிக்க வேண்டும்.
நாங்கள்
பத்து பேரும் பல திசைகளிலும் பறந்தோடினோம்.
பலனில்லை. திடீரென்று நாங்கள்
முதலில் நின்றிருந்த இடத்திலிருந்து பிள்ளைகள் வந்தனர். அவர்கள் ரேக்குகளின் நடுவில் தரையில் அமர்ந்து
கார்களை இயக்கி விளையாடிக் கொண்டிருந்ததால், எங்களால் அவர்கள் தலைகளைக் காண
முடியவில்லை.
துபாயிலிருந்து மதியம் 2 மணிக்கு மற்றொரு விமானம் மூலம் புறப்பட்டு, ஜோர்தானின் தலைநகராகிய அம்மானை மாலை 4.10 மணிக்கு சென்றடைந்தோம். 5.30 மணிக்கு 'எருசலேம்' எனும் விடுதிக்கு சென்று விட்டோம். (ஜானி: இந்த அம்மான் வேறு! நம்ப நாட்டு அந்தமான் வேறு! வீணா குழப்பிக்காதீங்க!)
எங்கள் குடும்பத்தினரும், மேலும் உறவினர்/நண்பர்கள் நால்வரும் வெளியே காலாற நடந்தோம். பல்பொருள் அங்காடிக்கு சென்று வேடிக்கை பார்த்து விட்டு (அதாங்க... விண்டோ ஷாப்பிங்!) சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.
உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல்… மே மாதத்திலும் அங்கு நல்ல குளிர். ஜனவரியில் மைனஸ் 4 டிகிரியைத் தொடுகிறது. (ஜானி: அடுத்த நாள் முதல் மாலை வேளைகளில் அண்ணாச்சி டீ ஷர்ட்டுக்கு மேல் சட்டை போட்டு கவர் பண்ணிகிட்டாரு. இல்லேன்னா ஆள் அம்பேல்தான்! ஃப்ரீஸ் ஆயிருப்பாரு!)
சுத்தமான சாலைகள். அவற்றுள் நடப்பவர்கள் குறைவு. இரண்டு சக்கர வாகனங்கள் பார்ப்பது அதிசயம். மலை வாசஸ்தலம் போல் ஏற்ற இறக்கங்கள். காரணம், 17 மலைகளில் அம்மான் வீற்றிக்கிறது. போக்குவரத்து வாகனங்களையும் நாங்கள் இருந்த இடத்தில் காண முடியவில்லை. கூண்டு வண்டிகளில் (வேன்) பயணிக்கிறார்கள். குறைவான ஜனத்தொகையே இவற்றிற்குக் காரணம்!
அம்மானில்
உள்ள அனைத்து கட்டடங்களும் ஒரே நிறத்தில் இருந்தது எங்களுக்கு வியப்பை
அளித்தது. வெள்ளையும் சந்தனக் கலரும்
சேர்ந்த ஒரு கலவை. அடுத்த நாள் எங்கள்
வழிகாட்டியைக் கேட்டோம். “அந்தக்
கலரில்தான் கட்டடம் கட்ட வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. அம்மலைகளில் கிடைக்கும் கற்களின் நிறமே
அதுதான்!” என்று விளக்கினார்.
விடுதிக்குத் திரும்பினால், மற்றொரு ஆச்சரியம்… ஐம்பது வகையான உணவுகள் எங்களுக்காக காத்திருந்தன. அதில் 12 வகை தித்திப்பு, மற்றும் கேக் வகைகள் மட்டுமே. அந்நாட்டின் விசேஷமான ஒலிவக் காய்களிலிருந்து செய்யப்பட்ட பலவித ஊறுகாய்களும் அதில் அடக்கம். எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பஃபே முறை!
(ஜானி: எல்லா இடங்களிலும் இதே மாதிரி உணவுதான். சாப்பாடு எப்படின்றதை, இவரோட உடம்பின் உருவத்தை வெச்சே நீங்க தெரிஞ்சிக்கலாம்!)
(ஜானி: எல்லா இடங்களிலும் இதே மாதிரி உணவுதான். சாப்பாடு எப்படின்றதை, இவரோட உடம்பின் உருவத்தை வெச்சே நீங்க தெரிஞ்சிக்கலாம்!)
4.5.2017:
ஒவ்வொரு நாளும் நாங்கள் 5 மணிக்கு எழுந்து, புறப்பட்டு 7 அல்லது 7.30 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு பேருந்துக்கு வர வேண்டும்.
ஜோர்தான் நதி ஓடுவதால் இந்நாட்டிற்கு ஜோர்தான் என்று பெயர் வந்தது. ஜோர்தானில் 92 சதவீதம் இஸ்லாமியர்கள். 4% கிறித்தவர்கள். மொத்த ஜனத்தொகையே 95 லட்சம்தான். (சென்னையை விடக் குறைவு.) அதில் 95% படித்தவர்கள். வாவ்!
அந்நாட்டின் ஒலிவ மரங்கள் வளைகுடா நாட்டின் எண்ணெய்க் கிணறுகள் போன்றவை. 2,000 வருடங்கள் வரை வாழக்கூடியவை. கொழுப்பில்லாத காய்களும், எண்ணெயும் உணவாகப் பயன்படுகின்றன. எண்ணெயும், இலைகளும் மருந்தாகவும், மரக்கட்டைகள் சிற்பம் செய்யவும் உதவுகின்றன. மேலும் மரங்கள் தரை போடவும் உதவுகின்றன.
ஜோர்டான்
நாடு நமக்கு மேற்கிலிருப்பதால் நம்முடைய நேரத்தைவிட 2 மணி நேரம் பின்னால் உள்ளது. இதை மறந்துவிட்டு எங்கள் குழுவில் உள்ள பெண்மணி
ஒருவர் 5 மணிக்கு அலாரம் வைத்து, அது 3 மணிக்கே அவரை எழுப்பிவிட்டது. அந்நேரத்தில் எழுந்த அவர் பற்களைத்
துலக்கிவிட்டு குளிக்கும் தொட்டியில் இறங்கும்போது வழுக்கி கீழே விழுந்து
எழுந்தார். பிறகு அவர் கணவர் “நேரம்
என்ன?” என்று கேட்கும்போதுதான், கைக் கடிகாரத்தைப் பார்த்து, தன் தவறை
உணர்ந்திருக்கிறார்.
ஆனால்
என்னுடைய கைப்பேசியின் நேரத்தை மாற்ற நான் முயன்றபொழுது, வைஃபியில் இருந்த
காரணத்தால், “உங்கள் நேரத்தை ஜி.பி.எஸ்ஸுக்கு தகுந்த மாதிரி மாற்ற வேண்டுமா?”
என்று கேட்டது. நான் “ஆம்!” என்று பதில் சொன்னதும்,
என் கைப்பேசி நாங்கள் சென்ற நாடுகளில் எல்லாம் நேரத்தைத் தானாகவே மாற்றிக் கொண்டது. வாவ்!
முதல் இடமாக நெபோ எனும் மலைக்கு சென்றோம். ஆண்டவர் மோசேயை அந்த மலையிலிருந்து கானான் தேசத்தைப் பார்க்கும்படியும், அங்கேயே தன் மீதி வாழ்க்கையைக் கழிக்குமாறும் கூறிவிட்டார். அங்கிருந்து பார்த்தால் எரிக்கோ, எருசலேம், மற்றும் யோர்தான் ஆற்றையும் காண முடிகிறது. அந்த இடத்தில் ஒரு அழகிய ஆலயத்தைப் படைத்துள்ளனர்.
மேலும் ஒரு சிலுவையைச் சுற்றிக் கொண்டுள்ள ஒரு பாம்பின் சிற்பத்தைப் பார்த்தோம். எண்ணாகம் 21: 4-9 ஆகிய வசனங்களில் சொன்னது போல், இஸ்ரவேல் மக்களில்
பலரை வனாந்திரத்தில் உள்ள பாம்புகள் கடித்ததால் இறந்தனர். கடவுள் சொன்னவாறே, மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த மனிதர்கள் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைத்தனர்.
அதனால் சிலுவையோடு பாம்பைப் பிணைந்த அச்சிற்பத்தை இத்தாலியக் கலைஞன் ஃபான்டனி உருவாக்கினார். அதை அங்கே நாட்டி வைத்துள்ளனர்.
அதனால் சிலுவையோடு பாம்பைப் பிணைந்த அச்சிற்பத்தை இத்தாலியக் கலைஞன் ஃபான்டனி உருவாக்கினார். அதை அங்கே நாட்டி வைத்துள்ளனர்.
பிறகு அங்குள்ள ஒரு அருங்காட்சியகத்தையும், போப் 2000-ஆம் ஆண்டு இங்கு வந்ததற்கு அடையாளமாக நிறுவியுள்ள ஒரு கல்தூணையும் பார்த்தோம்.
பிறகு மடாபா எனும் ஆலயத்துக்கு சென்றோம். அந்த ஊரில் பிரசித்திப் பெற்ற பைஸன்டைன் மொஸைக்கை வைத்து ஆறாம் நூற்றாண்டில் புனித பூமியின் முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்களைக் கொண்ட ஒரு வரை படத்தை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் 1896-இல் இது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு பலர் இதனை ஆராய்ந்து வருகிறார்கள்.
மடாபா மொஸைக் வரைபடம்
கிரேக்க வைதீக ஆலயத்தில் (வரைபட ஆலயம் என்றும் இதை அழைக்கிறார்கள்) இருபது லட்ச பல
வண்ணக் கற்களால் உருவாக்கப்பட்டு தரையில் புதைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு
வருகிறது. அப்படத்தில் மலைகள்,
பள்ளத்தாக்குகள், கிராமங்கள், பாலஸ்தீனிய நகரங்கள், நைல் கழிமுகம், போன்றவற்றை
ஓவியமாக வரைந்து வைத்திருக்கின்றனர்.
பரிசுத்த
நகரமாகிய எருசலேமின் பழைய உருவமைப்பையும் இதில் காணலாம். மேலும் இயேசுவுடைய கல்லறையைக் கொண்ட
ஆலயத்தையும் பார்க்கலாம். அழிந்த எருசலேமை
கி.பி. 70-இல் எப்படி புதுப்பிக்கப்பட்டது என்பது குறித்து வல்லுனர்கள் இப்படத்தைப்
பார்த்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.
பின்பு 25 கிலோமீட்டர் கடந்து மக்காறியஸ் எனும் இடத்துக்கு சென்றோம். அங்கு 100 படிக்கட்டுகள் இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து மற்றொரு மலையின் மீது ஏறினால், ஒரு பாழடைந்த ஏரோது அரசனின் அரண்மனை உள்ளது. அங்கு இரண்டு கல்தூண்கள் இருக்கின்றன. மேலும் அங்கு தூய யோவான் சிறையில் அடைக்கப்பட்டார். கி.பி. 32-ஆம் ஆண்டு அவர் தலை, ராணியின் ஆசைக்கிணங்க, ஆன்டிபாஸ் எனும் அரசரால் துண்டிக்கப்பட்டு, தட்டில் வைத்து கொடுக்கப்பட்டது. அம்மலைக்குப் பின்புறம் பள்ளத்தாக்கைக் கடந்து சாக்கடல் உள்ளது.
😝 எங்கள் குடும்பத்தினர் எங்கு சென்றாலும் நிறைய புகைப்படங்கள்
எடுப்பது வழக்கமாகிவிட்டது. கைப்பேசி
ஒருபக்கம். புகைப்படக்கருவி மறுபக்கம். என் மகனும், மகளும் சொல்லவேத் தேவையில்லை. மேலும் மகனும், மருமகனும் செல்ஃபீ குச்சியோடு
இணைத்தும் படம் எடுத்தார்கள்.
ஆனால், இதற்கு எதிர்மாறாக, என் பேரப் பிள்ளைகளுக்கு
புகைப்படம் என்றாலே அலுப்பும், வெறுப்பும் வந்து விட்டன. ஏனெனில் ஒவ்வொரு இடத்திலும் “அசையாமல் நில்…
சிரி… அங்கே பாரு…” என்றெல்லாம் சொல்வதை அவர்கள் விரும்பவில்லை.
மக்காறியஸ் மலைக்கு செல்லும்போது ஒரு வாண்டு மற்ற வாண்டுகளிடம்
இப்படிக் கூறியது. “டேய்… வாங்கடா…
சீக்கிரம் போகலாம். இல்லேன்னா, ஃபோட்டோ
எடுப்பாங்க!” என்று கூறவே நால்வரும் ஒரு படையாக அரண்மனையை நோக்கி முன்னேறின.
|
திரும்பும்போது இந்திய நிறுவனமான, லார்சன் டியூப்ரோ கட்டிய வாடி அப்டூன் எனும் ஒரு பாலத்தைக் கடந்தோம். இதை வழிகாட்டி தெரிவித்ததும், நாங்கள் காலரைத் தூக்கி விட்டு கொண்டோம். இக்கடக வடிவமைப்பாளருக்கு விருது கிடைத்ததை இணையத்தின் மூலம் அறிந்தபொழுது பூரிப்படைந்தேன்.
😤 நான்: ஜானி… மொத்தத்தில ஜோர்தான் எப்படி இருந்திச்சி?
ஜானி: ஜோர்தான் ரொம்ப ஜோர் தான் அங்கிள்!
5.5.2017:
காலையில் பேருந்து எங்களை இஸ்ரவேல் எல்லைக்கு அழைத்துச் சென்றது. சுங்க சோதனையை முடித்துக் கொண்டு அவர்கள் எல்லைக்குள் நுழையவே இரண்டு மணி நேரமானது. (எகிப்திலும் இதே கதைதான்.)
இஸ்ரவேலும், பாலஸ்தீனமும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பதால், பாலஸ்தீனத்தில் எந்த சோதனையும் இல்லை. இஸ்ரவேல் நாட்டுக்குள் வந்ததும் எங்களை அழைத்துச் செல்ல வேறு ஒரு பேருந்து வண்டி; புதிய வழிகாட்டியும்கூட!
அவ்விரண்டு நாடுகளிலும் நாட்டுக் கொடி வெவ்வேறு. மேலும் அவர்கள் வாகனத்தை வைத்து எந்த நாட்டவர் என்று கண்டுபிடித்து விடலாம். மஞ்சள் நிற வாகன இலக்கத் தகடு என்றால் இஸ்ரவேல் நாட்டவர் என்றும், வெள்ளை நிறத் தகடு என்றால் பாலஸ்தீன நாட்டவர் என்றும் அறிந்து கொள்ளலாம். முக்கியமாக ஜெரிகோவும், பெத்லேகேமும் பாலஸ்தீனர் ஆட்சியில்; எருசலேமும், நாசரேத்தும் இஸ்ரவேல் நாட்டுப் பிடியில்.
இயேசு
பேசிய மொழி அரமைக் எனும் யூத பாலஸ்தீன மொழி.
யூதேயா மக்கள் முதலாம் நூற்றாண்டில் பயன்படுத்திய மொழி. கலிலேயாவில் உள்ளவர்களின் உச்சரிப்பு
எருசலேமில் உள்ளவர்களுடைய உச்சரிப்பை விட சற்றே வித்தியாசப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் அரசரின் கட்டளைக்கிணங்க
மக்கள் எபிரேய மொழிக்கு மாறிவிட்டனர்.
இப்பொழுது இயேசு பேசிய அரமைக் மொழி பேசுபவர்கள் அரிதிலும் அரிது.
இப்பொழுது
இஸ்ரவேல் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளில் எபிரேய மற்றும் அரபு மொழியும் பேசுவதாக
எங்கள் வழிகாட்டி சோனியா கூறினார். ஆனால்
முதலில் எபிரேய மொழியில் பேசுவதுதான் முறை என்றும் கூறினார்.
😝 சோனியா என்பவர் இஸ்ரவேலில் எங்கள் வழிகாட்டி. அவர் பேசும் நேரத்தைவிட இருமும் நேரமே
அதிகம். காரணம் ஜலதோஷத்தால்
அவதிப்பட்டிருந்தார். முதல் நாளன்று அவர்
பேசும்போது, வார்த்தைகளுக்காக சற்றே தடுமாறினார். பின்பு தலையை நோக்கி தன் கை விரலைக் காட்டி,
“இங்கே நிறைய விஷயம் இருக்கு… அதை எப்படி சொல்றதுனு தெரியலை!” என்றார்.
உடனே பின்னாலிருந்த ஒரு நண்பர், “முதல்ல ஆங்கிலம் பேசக்
கத்துக்கோங்கோ!” என்று எங்களுக்கு மட்டும் கேட்கிற வகையில் சன்னமாகக் கூறினார்.
|
உலகத்தின் பழமையான நகரமாகிய எரிக்கோவுக்கு முதலில் சென்றோம். ஒரு சோலையின் நடுவில் அமைந்த ஒரு விடுதியில் உணவு அருந்தினோம். பல நாட்டவர்களும் வந்து போஜனம் பண்ணும் இடமது.
😤 முதல் மாடியிலிருந்த விடுதிக்குள் செல்ல படிக்கட்டில் ஏறினேன். எனக்கு வலது புறம் நடுத்தர வயதில் இரண்டு பெண்கள். எனக்கருகே இருந்தவர் என் வலது கையைத் தாங்கலாகப் பிடித்துக் கொண்டு அவருக்கு வலதுபுறமிருந்த பெண்ணிடம் பேசிக் கொண்டே படி ஏறினார். (காரணம்,
என் முன் வரிசையில் அவருடைய உறவினர் சென்று கொண்டிருந்தார். என்னை அவர் என்று நினைத்துக் கொண்டார்!)
உடனே அவர் கையை உதறுவது நாகரீகமாக இருக்காதே என்றும்,
மேலும் அவர் கீழே விழாமல் இருப்பதற்காகவே என் கையைப் பிடித்துள்ளார் என்பதை உணர்ந்த நான் பேசாமல் மேலே நடந்தேன். ஐந்தாறு படிகள் ஏறியவுடன் என் பக்கம் திரும்பிய அவர் சற்றே பதறி தன் கையை விடுவித்துக் கொண்டார்.
உடனே பின்னாலிருந்து ஓடி வந்த அவருடைய தோழி,
“அவர் உங்கள தன்னோட பாய் ஃப்ரண்ட்டுனு நினைச்சிகிட்டாரு!” என்று குஷியாகக் கத்தி கலாட்டா செய்தார். இது ஒரு விநோதமான அனுபவம்!
|
அக்காலத்தில் இஸ்ரவேலர் யோசுவா தலைமையில் ஜெரிகோவை 7 நாட்கள் வலம் வந்து இசைக் கொம்பை ஊதியே கோட்டைச் சுவர்களை விழ வைத்தனர். அவ்வூரின் மற்றொரு பகுதியில் உள்ள இயேசுவைச் சாத்தான் சோதித்த மலைக்கு அழைத்துச் சென்றனர். மலையின் உயரம் 1201 அடி.
இம்மலைக்கு குவாரண்டினா என்ற லத்தீன் பெயரும் உண்டு. அதற்கு நாற்பது என்று அர்த்தம். இயேசு நாற்பது நாட்கள் இந்த மலையிலும், காட்டிலும் உபவாசத்தில் இருந்தார். அதனால், இன்றைய கிறித்தவர்களும் லெந்து காலத்தில் நாற்பது நாட்கள் உபவாசம் இருக்கின்றனர்.
அம்மலையின் மீது ஏற ஆஸ்திரிய ஸ்விஸ் கம்பெனி ஒன்று 1998-இல் 4,300 அடி நீளத்திற்கு கம்பி மீது செல்லும் கேபிள் காரை அறிமுகப்படுத்தியது. புத்தாயிரம் (Millenium) வருடத்தின் போது நிறைய பக்தர்கள் வருவார்களென்று
இந்தக் காரை உருவாக்கினார்கள்.
மலையின் நடுவில் கிரேக்க வைதீக மடாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மற்ற கிரேக்க மடாலயங்களைப் போலில்லாமல், இதில் ஆண்கள், பெண்கள் ஆகிய இருவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.
மலையின் நடுவில் கிரேக்க வைதீக மடாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மற்ற கிரேக்க மடாலயங்களைப் போலில்லாமல், இதில் ஆண்கள், பெண்கள் ஆகிய இருவரையும் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள்.
அங்குள்ள கடையில் அனைவரும் பேரீச்சைப் பழமும், ஒலிவ எண்ணெயும் வாங்கினர்.
அங்கு போகும் வழியில் காட்டத்தி மரத்தைக் காண்பித்தனர். இயேசுவைக் காண குள்ளமான சகேயு காட்டத்தி மரத்தில் ஏறிப் பார்த்ததாக விவிலியம் கூறுகிறது. சகேயு
அம்மரத்தின் மீது அமர்ந்து இயேசுவைப் பார்ப்பது போல நான் கற்பனை செய்து
பார்க்கும்போது எனக்குள் ஒருவித உணர்ச்சியும், உற்சாகமும் பிறந்தன.
அங்குள்ள கடையில் காட்டத்தி மரக் காயை சுவைக்கக் கொடுத்தார்கள். அது சுவையில் நம் நாட்டு மணிலாவை ஒத்திருந்தது. நிறம் பச்சை. ஆனால் கூடுதலான இனிப்பு.
அங்குள்ள கடையில் காட்டத்தி மரக் காயை சுவைக்கக் கொடுத்தார்கள். அது சுவையில் நம் நாட்டு மணிலாவை ஒத்திருந்தது. நிறம் பச்சை. ஆனால் கூடுதலான இனிப்பு.
அடுத்து எருசலேமிலுள்ள மேரி மாதா இறந்த இடத்தில் உள்ள ஆலயம். அதன் கூரையும், உட்புறமும் கம்பீரமான அழகு. ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம் பலமுறை போரினால் இடிக்கப்பட்டது. கடைசியில் 1910-இல் இப்பொழுதுள்ள ஆலயம் கட்டிமுடிக்கப் பட்டது.
கீழறையில்
தாவீதின் கல்லரையும், மேலறையில் இயேசு இராப் போஜனம் கொடுத்த இடமும் இருப்பதால், இக்கட்டடம்
மூன்று மதத்தினருக்கும் முக்கிய இடமாகும்.
எனவே, இந்த ஆலயத்தின் மணியடிக்கும் கூண்டுடைய நிழல் அக்கட்டடத்தில்
விழாமலிருக்க, கூண்டு மட்டும் சற்று தள்ளி கட்டப்பட்டிருக்கிறது.
இந்த
இடத்தில்தான், இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின்பு, மேரி இயேசுவுடைய சீடனான
யோவானோடு 16 வருடங்கள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இயேசுவின் தகப்பனான, யோசேப்பு மேரியைவிட
அதிக வயதானவர் என்றும், இயேசு சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு முன்னரே இறந்து விட்டார்
என்றும் எங்கள் அருட்தந்தை கூறினார்.
அதனாலேயே
சிலுவையில் அறையப்பட்ட இயேசு, “இதோ உன் மகன்!” என்று யோவானைக் காண்பித்தார். மேலும் மேரி நோய்வாய்ப்பட்ட தன் கணவனைக்
கவனித்துக் கொள்ளும் ஒரு காட்சி அங்குள்ள அழகிய படமொன்றில் காண முடிந்தது.
அதற்கு வெகு அருகாமையிலிள்ள இயேசு தன் சீடர்களுக்கு கடைசி விருந்து வழங்கிய மேலறைக்குச் சென்றோம். போரினால் அழிக்கப்பட்ட அவ்விடத்தை சீரமைத்து புதியதாகக் 10-ஆம் நூற்றாண்டில் கட்டியுள்ளனர்.
சீடர்கள்
எருசலேமில் இருக்கும்போது, இந்த அறையில் தங்கினார்கள். இயேசு சிலுவையில் அறைந்த பிறகு இரண்டு முறை
சீடர்களுக்கு காட்சி அளித்த இடமும் இந்த அறைதான்.
(யோவான் 20: 19) அப்பொழுது தோமாவும் அவர் தழும்புகளைத் தொட்டுப் பார்த்து
நம்பிய இடமும் இதுதான்.
மேலும்
அப்போஸ்தலர் 2 : 4-இல் சொல்வதுபோல், அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட
இடமும் இதுதான்! எனவே இவ்வறை அனைத்துக்
கிறித்தவர்களுக்கும் ஒரு முக்கியமான இடமாகும்.
புனித பூமிக்கு சென்றவர்களுக்கும், செல்ல முடியாதவர்களுக்கும், அவர்களுடைய
உள்ளமே ஒரு மேலறைதான்! அதைப் பரிசுத்தமாக
வைத்திருக்கும் பட்சத்தில் இயேசு அங்கு குடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இயேசு
மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, மேலறையில் ஒரு நாள் 120 பேர் ஒரு மனதோடு ஜெபம் செய்தனர். பரிசுத்த ஆவி அவர்கள் மேல் அபிஷேகம் பண்ணும் மட்டும்
அவர்கள் ஜெபம் செய்தனர். ஆலயம் அப்படித்தான்
உருவாயிற்று. ஆலயம் என்றால் அப்படிப்பட்ட ஒரு
குழுவையே குறிக்கிறது. காரணம் அக்காலத்தில்
தனியாக கட்டடம் இல்லை. ஆலயம் என்ற வார்த்தை
இப்படிப்பட்ட விசுவாசக் கூட்டத்தையோ, அல்லது விசுவாசிகள் கூடும் கட்டடத்தையோ குறிக்கிறது.
இங்கு
கூட்டம் அதிகமாக இருந்தது. வெளிநாட்டினர்
பலர் வந்திருந்தனர். எனினும் எனக்கு ஒரு
காணொலி எடுக்க வேண்டும் என்று ஆசை.
அருகில் இருந்த என் மகனோடு ஒரு குட்டி நேர்காணலும் எடுத்தேன்.
எங்கள் குழுவில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகள் மட்டுமே ஏழு, எட்டு வயதுடைய சிறுவர்கள். மற்றவர்களில் பாதிப்பேர் 50 வயதுக்கு மேல்தான். அதில் ஒருவர் 81 வயது.
மேலறையைப் பார்த்துவிட்டு இரண்டாவது மாடிக்கு பிள்ளைகளோடு படிக்கட்டில் ஏறிச் சென்றோம். அங்கு நாலா பக்கமும் அசத்தலான காட்சிகள். நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். கீழே வந்த சில நொடிகளில் பிள்ளைகளைக் காணவில்லை. அருகிலிருந்த கழிப்பறையிலும் அவர்கள் இல்லை.
பல நாட்டுப் பயணிகள் கூடியிருக்கும் அந்த இடத்தில் யாரைக் கேட்பது? எங்கே தேடுவது? அந்த சில நொடிகள் பல யுகங்களாகக் கழிந்தன.
திடீரென்று பார்த்தால், வெளியே இருந்து அந்த மூன்று பிள்ளைகளும் வந்தார்கள். கேட்டால், “நாங்க பஸ்ல போய் வெயிட் பண்ணிகிட்டு இருந்தோம். உங்களைத்தான் காணோம்!” என்று சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னார்கள்.
அங்கிருந்து நடந்து கைப்பாஸ் எனும் தலைமைப் பூசாரியின் வீட்டில் இயேசுவை அடைத்து வைத்த சிறையைப் பார்த்தோம். அவருடைய
கைகள் அங்கு சுவற்றோடு கட்டப்பட்டிருந்தன.
இயேசுவை அங்கு படிக்கட்டுகளில் அழைத்துச் செல்லும்போது, பேதுரு மூன்று முறை மறுதலித்ததும், அவர் பேதுருவைத் திரும்பிப் பார்த்தார். (ஜானி: உடனே அனைவரும் அந்தப் படிக்கட்டை ‘க்ளிக்’ செய்தனர்!) அங்கிருந்து அடுத்த நாள் இயேசுவைப் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர்.
பெத்லேகேமிலுள்ள 'பெத்லேகேம்' எனும் அசத்தலான விடுதிக்குத் திரும்பியதும் எங்கள் குழு மட்டும் அந்த களைப்பிலும் ஊரைச் சுற்றிவிட்டு வந்தோம். (நாங்கள் சென்ற விமானத்தில்தான் திரு. மோகன் லாசரஸ் அவர்களும் புனித பூமிக்கு வந்தார். அவரும் அவருடன் வந்திருந்த புனித பூமிப் பயணிகளும் இந்த விடுதிக்கு முன்பு நின்றிருந்ததை நாங்கள் பேருந்தில் போகும்போது 2 நாட்கள் கழித்துப் பார்த்தோம்.)
குளிர் அம்மானைவிட சற்றே குறைவு. அங்குள்ள கடைகளில் பரிசுப் பொருட்கள் வாங்கினோம். புகைப்படங்களும் எடுத்தோம்.
6.5.2017:
இஸ்ரவேல் நாட்டின் ஜனத்தொகை 86 லட்சம். இதில் 75% யூதர்கள். 17% முகமதியர். பேசுவது யூத மொழியும் அரபி மொழியும். (ஜானி: எப்படி புத்தரை வணங்குபவர்கள் இந்தியாவைத் தவிற மற்ற நாடுகளில் அதிகமோ, அதே போல், கிறித்தவர்கள் இஸ்ரவேலைத் தவிற மற்ற நாடுகளில் அதிகம்!)
அன்று 2 மணி நேர பயணத்துக்குப் பின்பு நாசரேத்திலுள்ள மேரி அன்னையின் வீட்டை அடைந்தோம். அதில் காபிரியல் தூதன் மேரியிடம் இயேசு அவர் மூலம் அவதரிக்கப்போவதை அறிவித்த இடத்தைக் காண முடிந்தது.
ஆலயத்துக்கு வெளியே வந்தால், இயேசுவின் தந்தையான யோசேப்புடைய தச்சுப் பட்டறையைப் பார்த்தோம். அந்தப் புராதன காலத்து கட்டடத்தை அப்படியே பாதுகாத்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆலயத்தையும் அழகாக வடிவமைத்துள்ளனர். (ஜானி: ஆர்க்கிடெக்சர் அனைத்தும் டக்கர் அங்கிள்!) மேலும் அதன் சுவற்றில் புகழ் மிக்க ஓவியக் கலைஞர்கள் அங்கு நடந்த காட்சிகளை தத்ரூபமாக வரைந்து வைத்திருப்பது கண்களைக் கவர்கின்றன.
அடுத்ததாக மேரியின் கிணறு. அங்கு ஊற்றுத் தண்ணீர் இன்றும் வருவதைப் பார்க்க முடிந்தது. மேலும் அத்தண்ணீர் குடிப்பதற்கு சுவையாக இருந்தது. நம்மோடு வந்தவர்கள் தாங்கள் எடுத்து வந்த புட்டிகளிலும் அதை நிரப்பிக் கொண்டனர். அங்கு நிறையக் கூட்டம். யாரோ ஒரு பாதிரியார் தண்ணீரை எடுத்து அருகிலிருந்தவர்கள் மீது தெளித்தார். அந்த வெப்பநிலையில் ‘சில்’லென்று எதமாக இருந்தது.
சில வரலாறுகள் இந்த இடத்தில்தான் காபிரியேல் மேரியின் முன்பு தோன்றியதாகக் கூறுகின்றன.
மதிய உணவுக்குப் பிறகு கானா ஊரில் திருமணம் நடந்த இடத்துக்கு சென்றோம். அத்திருமணத்தில்தான் இயேசு தன் முதல் அற்புதமான தண்ணீரைத் திராட்சை ரசமாக்கினார். எப்படி மோசே எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்களை அழைத்து வர முதல் அற்புதமாக, நைல் நதித் தண்ணீரை இரத்தமாக்கினாரோ, அதே போல மக்களை ரட்சிக்க வந்த இயேசு தன் முதல் அற்புதமாக தண்ணீரைத் திராட்சை ரசமாக்கினார் என்று வேத வல்லுனர்கள் கூறுகின்றனர்.
எங்கள் குழுவுடன் வந்த அருட்தந்தை சின்னப்பா அவர்கள் அங்குள்ள ஆலயத்தில் பிரார்த்தனை ஏறெடுத்தார். அருட்தந்தையின் வாக்குக்கிணங்க காணிக்கைப் பாடலாக எங்கள் குடும்பம் "Count your blessings" எனும் ஆங்கிலப் பாடலைப் பாடினோம்.
பிறகு அருகேயுள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றோம். தொல் பொருள் ஆராய்ச்சியின்போது, கண்டெடுக்கப்பட்ட புராதன திராட்சையைப் பிழியும் கருவி, சாந்து பூசப்பட்ட தொட்டி, பாத்திரங்கள், ஜாடிகள் போன்றவைகளை அங்கு பார்வைக்காக வைத்திருந்தனர். அதில் இயேசு பயன்படுத்திய ஏழு திராட்சை ரசக் கல் ஜாடிகளில் ஒன்றையும் பார்க்க முடிந்தது.
ஆலயத்துக்கு வெளியே சிறிது தூரத்தில் உள்ள கடையில் திராட்சை ரசமும், நினைவுப் பொருட்களும் விலைக்கு கிடைத்தன.
கடைசியாக தாபோர் எனும் மலையுச்சிக்கு மலையடிவாரத்திலிருந்து கார் மூலம் சென்றோம். அங்கு இயேசு மோசேயையும், எலிஜாவையும் சந்தித்து பேசியதாக விவிலியம் விவரிக்கிறது. சுவர்களில் அழகிய ஓவியங்கள் அலங்கரித்தன. ஆலயத்துக்கு இடது புறத்தில் ஜெஸ் ரீல் பள்ளத்தாக்கின் அழகு மனதைத் தொட்டது.
உருமாற்றமடைந்த
(Transfiguration) இயேசுவை சீடர்கள் கண்ட இடம் இதுதான். மத்தேயு 17 :1-13-இல் சொல்வதுபோல், இயேசுவின்
முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது. அவரது
உடைகள் ஒளியைப் போல் வெண்மையாயின. அவரோடு
மோசேயும், எலியாவும் பேசினார்கள்.
இஸ்ரவேல் அரசுக்கு ஒரு விண்ணப்பம். இம்மலையில் கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாதையின் அகலம் அவ்வளவு குறைவு. எனவே இம்மலையின் உச்சிக்குச் செல்ல கேபுள் கார் ஏற்பாடு செய்தால் வசதியாக இருக்கும்.
தாபோர் மலையுச்சியில் உள்ள இந்த ஆலயத்தை வெகுதூரத்திலிருந்து படம் எடுத்தால், சுற்றியுள்ள மற்ற அழகிய இடங்களையும் பார்க்கலாம் அல்லவா?
அன்று நாங்கள் தங்கிய விடுதியின் பெயர் க்ளப் ஹோட்டல் டைபீரியஸ். அது மலை மீது அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடியில் (மேலே அல்ல) 10 அடுக்குகள், R, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, R இறங்கும் வரிசையில் அமைந்திருந்தன. இதனால் அனைவரும் பழக்கத்தின் காரணமாக கீழேயுள்ள R எனும் எழுத்தை அழுத்தி கடலிருக்கும் ‘பேஸ்மெண்ட்’ பகுதிக்கு வந்து விட்டு மீண்டும் R எனும் பத்தாவது மாடிக்கு சென்றார்கள். 10-வது மாடிதான் வெளியே செல்லும் தரைப் பகுதி.
கீழேயுள்ள தரைப்பகுதியில் கடல் மற்றும் நீச்சல் தடாகம் உள்ளன. அங்கு பிள்ளைகள் விளையாடும் இடமும் இருந்தது. இது வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருந்தது.
கீழேயுள்ள தரைப்பகுதியில் கடல் மற்றும் நீச்சல் தடாகம் உள்ளன. அங்கு பிள்ளைகள் விளையாடும் இடமும் இருந்தது. இது வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருந்தது.
மேலும் அந்த விடுதியின் பிற்பகுதியில் கலிலேயாக் கடல் உள்ளது. நம் அறையிலிருந்து பார்த்தால், 'சீ வியூ' மிகவும் ரம்மியமான காட்சி. நாங்கள் அனைவரும் கீழேயுள்ள தரைப்பகுதியில் உள்ள பிள்ளைகள் விளையாடும் இடத்துக்கு சென்றோம். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். குளிர் அதிகமானதால் நான் மட்டும் உணவருந்த நழுவிவிட்டேன்.
7.5.2017:
முதலில் இயேசு மலைப் பிரசங்கம் செய்த இடத்துக்கு சென்றோம். வேதாகமத்தின் முக்கிய கருத்துக்கள் அனைத்தும் இப்பிரசங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கருத்துக்கள் உலகம் முழூவதும் போதிக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக 8 பேரின்ப செய்திகளும், கடவுளுடைய பிரார்த்தனையும் அடங்கி இருக்கிறது. சில வேத வல்லுநர்கள் இப்பிரசங்கம் ஒரே நாளில் செய்யப்பட்டதல்ல, வெவ்வேறு நாட்களில் செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று கூறுகிறார்கள்.
அன்று ஞாயிறு. எனவே எங்கள் பாதிரியாருடன் பிரார்த்தனை மேற்கொண்டோம்.
அன்று ஞாயிறு. எனவே எங்கள் பாதிரியாருடன் பிரார்த்தனை மேற்கொண்டோம்.
பயணத்தின்போது, எங்கள் வீட்டு மூன்று பிள்ளைகளோடு அனைவரும் அன்பாகப் பழகினார்கள். பேருந்தில் சென்ற போது அருட்தந்தையும் அவர்களைப் பாடல் பாடும்படி கேட்டு, அதை ரசித்தார். எனவே அந்த ஆராதனையிலும் பிள்ளைகளை ஒரு பாடல் பாடும்படி கோறினார். பிள்ளைகளும் சமீபத்தில் VBS-இல் கற்றுக் கொண்ட ஒரு செயலோடு கூடிய (Action song) பாடலைப் பாடி கைத்தட்டல் பெற்றனர்.
ஓயாசிஸ் கத்தோலிக்க நிறுவனமானதால் எங்களை அழைத்துச் சென்ற ஆலயங்கள் முக்கால்வாசி கத்தோலிக்க ஆலயங்கள். மீதி ஆர்தோடாக்ஸ் ஆலயங்கள். ஆர்தோடாக்ஸ் ஆலயத்தில் கட்டுப்பாடுகள் அதிகம். அங்குள்ள ஆலயத்தில் ஒரு மேற்கத்தியப் பெண் கையில்லாத ஆடை அணிந்ததால், அங்குள்ள பெண் துறவி, அவளை நிறுத்தி சைகை மூலம் உடலை மறைக்குமாறு கூறினாள்.
அந்த ஆலயம் எட்டு கோண (Octagon shape) வடிவில் கட்டப்பட்ட மிகவும் அழகான ஆலயம். காரணம் மலைப் பிரசங்கத்தில் முக்கியமாக எட்டு பேரின்பச் செய்திகள் அடங்கி இருக்கின்றன. மேலும் இத்தோட்டத்தில் பக்தர்கள் தத்தம் குழுக்களோடு பிரார்த்தனை செய்ய மூன்று வழிபடும் இடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு இடத்தில்தான் நாங்கள் தொழுகை செய்தோம்.
இதுபோல ஆலயத்திலோ அல்லது சிற்றாலயத்திலோ குழுவாக வழிபடுவதற்காக எந்த கட்டணமும் இல்லை. ஆனால் அங்கு சேகரிக்கும் காணிக்கையை அந்தந்த ஆலயத்துக்கு கொடுத்து விடுவது வழக்கம்.
அது மட்டுமல்ல. சரித்திரப் புகழ் வாய்ந்த கிறித்தவ ஆலயங்களில் நுழையும்போதும் எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை. இது பற்றி அருட்தந்தையிடம் கேட்டேன். புனித வெள்ளி அன்று உலகம் முழூவதுமுள்ள கத்தோலிக்க ஆலயங்களில் பிரத்தியேகமாக இதற்கென்று எடுக்கும் காணிக்கைகளை அப்படியே புனித பூமியில் உள்ள ஆலயங்களுக்கு அனுப்பிவிடுவதாகக் கூறினார். ஆனால் இந்த வழக்கம் ப்ராட்டஸ்டண்ட் பிரிவில் இல்லை.
வடக்கு இஸ்ரவேலில் உள்ள கலிலேயாக் கடலில் நாங்கள் இயேசுவின் பாத அடிகளைப் பின் பற்றினோம். அதன் கடற்கரையில்தான் கப்பர்நகூம் எனும் அழகிய ஊர் இருக்கிறது. அது அக்காலத்தில் மீன்பிடிப்பவர்கள் வாழும் இடம். அவ்வூரில் உள்ள பேதுருவுடைய மாமியாரின் வீட்டை, அவர் வாழும்போது எப்படி இருந்ததோ அதே நிலையில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
யோவான், அந்திரேயா, யாக்கோபு, மற்றும் வரி வசூலிக்கும் மத்தேயு ஆகியவர்களுடைய வீடுகளும் அதே ஊரில்தான் இருந்தன.
அதற்கு அருகிலேயே synagogue என்று கூறப்படும் யூதரின் கோயில் பாழடைந்த நிலையில் கண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஒரு ஓய்வு நாளில், இயேசு இக்கோயிலில் போதகம் செய்ததாகவும், பிறகு கெட்ட ஆவியுடைய ஒரு மனிதனுக்கு சுகம் கொடுத்ததாகவும் வேதத்தில் வாசிக்கிறோம். பிறகு பேதுருவின் மாமியாரின் வீட்டில் ஒருவருக்கு ஜூரத்திலிருந்து விடுதலைக் கொடுத்தார்.
ரோமானிய நூற்றுக்கதிபதி தன்னுடைய வேலைக்காரனுக்கு சுகமளிக்கும்படி வேண்டியதும் இந்த ஊரில்தான் என்று லூக்கா 7: 1-10 கூறுகிறது. மேலும் இயேசு ஒரு வீட்டில் போதிக்கும்போது, உள்ளே நுழைய முடியாத காரணத்தால் ஒரு முடக்குவாதக்காரனை அப்படியே கட்டிலோடு வீட்டின் கூரையைப் பிரித்து மேல் புறமாக உள்ளே இறக்கின நிகழ்ச்சியும் இவ்வூரில்தான் நடந்தது. (மாற்கு 2:1)
இயேசு மலையடியிலுள்ள குக்கிராமமாகிய நாசரேத்தை விட்டு இந்த ஊரில் வந்து தங்கி தன் பொது ஊழியத்தைத் துவங்கினார் என்று மத்தேயு 4:12-17 கூறுகிறது.
மதிய உணவில் பேதுரு மீன் என்றழைக்கப்படும் சப்பையான மீனை அப்படியே முழுமையாக பொறித்துக் கொடுத்தார்கள். மாற்றாக கோழிக் கறியை ஒரு வடைபோல் செய்து அதன் மீது எள்ளைத் தெளித்துக் கொடுத்தார்கள். சுவை அருமை! மேலும் புத்தம் புதிய பேரீச்சைப் பழங்களும், குடிக்க அராபிய காபியும் கிடைத்தன.
கலிலேயாக் கடலுக்கு திபேரியாக் கடல் என்றும் ஒரு பெயர் உண்டு. இது மற்ற கடல்களைப் போலல்லாமல் நல்ல தண்ணீரைக் கொண்டது. இதன் நீளம் 21 கி.மீ. அகலம் 13 கி.மீ. அதிக பட்ச ஆழம் 141 அடி. கடல் மட்டத்தை விட 700 அடி தாழ்ந்து இருக்கிறது. நல்ல தண்ணீரைக் கொண்ட கடல்களில் உலகிலேயே தாழ்ந்த கடல் இது. இதன் வடிவம் தாவீது மீட்ட இசைக் கருவியைப் போல் உள்ளது.
நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் எங்களோடு கலிலேயாக் கடலாவது யோர்தான் நதியாவது வந்து நட்புக் கரங்கள் நீட்டின. கலிலேயாக் கடல் என்னவோ ஒரு ஆறு மாதிரி தோன்றியது. அதைக் குளம் என்று கூட இணையதளம் வர்ணிக்கிறது. அக்கடலில்தான் இயேசு சீடர்களுடன் மீன் பிடித்தார். அத்தண்ணீரின் மீது நடந்தார்.
மேலும் கலிலேயாக் கடலில் மீன் பிடித்தவர்களைத் தன் சீஷராக்கி மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக இயேசு மாற்றினார் அல்லவா? எனவே கலிலேயாக் கடலில் பெரிய படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்தோம்.
போதாக்குறைக்கு அந்தப் படகை நடத்துபவர்கள், நம் நாட்டுக் கொடியை ஏற்றி, எங்களோடு நடனமாடியும், விளையாடியும் எங்களைப் பரவசப்படுத்தினர். லுங்கி
டான்ஸ் இசைவிக்கப்பட்டது. அதற்கு
நண்பர்கள் சிலர் நடனமாடினார்கள். நேரம் போனதே தெரியவில்லை. பிறகு அருகிலிருந்த அருங்காட்சியகத்துக்கு சென்றோம்.
அந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் பழமையான முதல் நூற்றாண்டின் படகை இயேசுவின் படகு என்றும், கலிலேயாக் கடலின் படகு என்றும் அழைக்கிறார்கள். இப்படகு 1986-ஆம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. கலிலேயாக் கடலின் வட மேற்குப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. 27 அடி நீளம், 7.5 அடி அகலம், 4.3 அடி உயரம் உள்ள படகின் மீதமிருக்கிறது. கலிலேயாக் கடலின் நீர் வற்றியபோது, இதைக் கண்டெடுத்தார்கள்.
இப்படகைக் காப்பாற்ற முடிந்ததற்குக் காரணம் இப்படகை மண் மூடியிருந்ததால், 2000 வருடங்களாக தண்ணீர் இதை அரிக்கவில்லை. இதை மீட்டெடுத்தப் பின்பும் இப்படகை அப்படியே ஒரு இரசாயனக் கலவையில் பல நாட்கள் வைத்து காத்த பின்னரே மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இப்படகைக் காப்பாற்ற முடிந்ததற்குக் காரணம் இப்படகை மண் மூடியிருந்ததால், 2000 வருடங்களாக தண்ணீர் இதை அரிக்கவில்லை. இதை மீட்டெடுத்தப் பின்பும் இப்படகை அப்படியே ஒரு இரசாயனக் கலவையில் பல நாட்கள் வைத்து காத்த பின்னரே மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை இயேசுவோ அல்லது அவரது சீடர்களோ பயன்படுத்தினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இப்படகு இங்கிருப்பதால், இந்த அருங்காட்சியகத்தை இயேசுவின் படகு அருங்காட்சியகம் என்று அழைக்கிறார்கள்.
அடுத்தது டாப்கா. அங்குதான் இயேசு 5,000 பேர்களுக்கு போஷித்தது. மேலும் அவர் அமர்ந்திருந்த கல்லை அப்படியே பாதுகாத்து வருகின்றனர்.
பிறகு உயிர்த்தெழுந்த இயேசு பேதுருவைச் சந்தித்த இடத்துக்கு விரைந்தோம். அந்த ஆலயத்துக்கு அருகில் கலிலேயாக் கடற்கரை மிகவும் ரம்மியமாக இருந்தது. அந்த இடத்தில்தான் உணவருந்தியவாறு இயேசு பேதுருவைப் பார்த்து, “என்னை நேசிக்கிறாயா?” என்று மூன்று முறைக் கேட்டதும், பேதுரு தழுதழுத்த குரலில் “நீரே அதை அறிவீர் ஆண்டவரே!” என்று பதில் கூறினார். என் மனதைத் தொட்ட நிகழ்ச்சி அது. இப்பொழுது அந்த இடமும் என்னைத் தொட்டுவிட்டது.
பேதுரு
மூன்று முறை மறுதலித்ததால், இயேசுவும் அவரிடம் அவ்வாறு மூன்று முறை கேட்டிருக்கக்
கூடும். மேலும் நெருப்புக்கு அருகில்
பேதுரு மறுதலித்தது போலவே, இயேசும் நெருப்புக்கு அருகில் இருந்து அக்கேள்வியைக்
கேட்டார்.
மேலும் அவ்விடத்தில் பேதுருவை கிறித்தவ சமுதாயத்தை வழி நடத்துமாறும், அவர் கிறித்தவ சமயத்துக்காக உயிர் தியாகம் செய்யப் போவதையும் இயேசு (யோவான் 21-இல்) வெளியிட்டார்.
கலிலேயாக்
கடற்கரையில் நாங்களும் நின்று கால்களை நினைத்து குளுமைப் படுத்திக் கொண்டோம். அந்த இடத்தில் நாங்கள் இன்னும் சிறிது நேரமாவது
கழிக்க விரும்பினாலும், “சீக்கிரம், சீக்கிரம்!” என்று எங்களைப் புறப்பட வைத்து
விட்டனர்.
இயேசு
பல இடங்களில், படகில் அமர்ந்தவாறு உபதேசம் செய்யும்போது, மக்கள் கரையில் அமர்ந்து
அவருடையை செய்தியைக் கேட்டனர் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம். அம்மாதிரி நிகழ்வுகள் இந்த இடத்தில்
நடந்திருக்கக் கூடும். அந்த அளவுக்கு அந்த
இடம் அமைதியும், ரம்யமும் சேர்ந்து அசத்தலாக இருந்தது.
பிறகு அங்கிருந்து இயேசு யோவானிடம் ஞானஸ்நானம் பெற்ற யார்டெனிட்
எனும் யோர்தான் கரைக்கு சென்றோம். அங்கு எங்கள் குழுவிலிருந்து சுமார் இருபது பேர் போதகர் மூலம் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றனர். யோர்தான் கரை பெரிய ஆறு போலில்லை. மாறாக ஒரு கால்வாய் அல்லது நிலத்துக்கு வந்த கடல் நீர் (Backwaters) போல அகலம் குறைவாகக் காட்சி அளித்தது. ஆனால் செடிகொடி மரங்களுடன் இயற்கையான அழகோடு மிளிர்ந்தது.
அந்த இடம் மிகவும் அமைதியான இடமாகும். தியானம் பண்ண அருமையான இடம்.
அந்த இடம் மிகவும் அமைதியான இடமாகும். தியானம் பண்ண அருமையான இடம்.
அங்கு வெள்ளைத் துணியணிந்தவர்களே திருமுழுக்கு எடுக்க முடியும். வாடகைக்காக வெள்ளை நிற ஆடைகளும், உடை மாற்ற தனி அறைகளும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
திருமுழுக்கு எடுக்க ஆயத்தமானவர்களில் மிகவும் 'பொடியன்' யார் தெரியுமா? என் பேரன்தான். அவனுக்கு வயது எட்டு. அவனிடம் என் மகள், “ஏன் ஞானஸ்நானம் எடுக்கணும்னு ஆசைப்படறே?” என்று கேட்டதற்கு, அவன் தெள்ளத்தெளிவாக, “அப்போதான் பரிசுத்த ஆவியானவர் என்னோடு வருவாரு!” என்று நெத்தியடியாகக் கூறினான். (ஜானி: பேஷ் பேஷ்! உங்க வீட்டில் ஒரு போதகர் உருவாகிக் கொண்டிருக்கிறார்.)
யோர்தான் நதி வடக்கே லெபனானில் புறப்பட்டு, சிரியா, இஸ்ரவேல், ஜோர்தான் வழியாக செல்கிறது. போகும் வழியில் நல்லத் தண்ணீர் வைத்திருக்கும் கலிலேயா கடலுக்கும், உப்புத் தண்ணீர் வைத்திருக்கும் சாக்கடலுக்கும் கைம்மாறு கருதாமல் தண்ணீர் வழங்கிவிட்டு செல்கிறது. நாமும் இது போன்று நல்லவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் உதவ வேண்டும் என்று புரிகிறதல்லவா? இதைத் தானே இயேசுவும் கூறினார்.
பிறகு மேற்குக் கடல் கரையிலிருந்த (மத்திய தரைக் கடல்) ஹைஃபா எனும் நகரத்து வழியாகத் திரும்பினோம். (அங்கிருந்து லெபனான் நாடு அருகாமையிலிருக்கிறது. 143 கிலோமீட்டர்தான்!) அங்குள்ள மலையின் மீதுள்ள எலிஜாவின் குகையையும், கர்மேல் ஆலயத்தையும் பார்க்க வேண்டி திட்டமிட்டிருந்தோம். ஆனால் அன்று மேரி மாதாவுக்கு மலை மீது உற்சவம் நடந்ததால் அங்கு செல்லும் திட்டத்தை கை விட்டோம்.
மேலும் 1 இராஜாக்கள் 18-ஆம் அதிகாரத்தில் உள்ளபடி எலிஜா, ஆகாப் எனும் அரசனுடைய பொய்யான தீர்க்கதரிசிகளுடன் அம்மலையின் மீது போட்டி நடத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள். அவர்களுடைய பலி ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் எலிஜாவின் பலியோ ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கர்மேல் மலையின் துவக்கத்தில் கட்டப்பட்டிருந்த அழகான பஹாய் தோட்டத்தை பேருந்திலிருந்தே பார்த்தோம். அங்கிருந்து எருசலேமைத் தாண்டியுள்ள பெத்லேகேமுக்கு பயணித்தோம்.
பெத்லேகேமில்
அறை வாடகை எருசலேமை விட குறைவு என்பதால் அங்கு தங்க ஏற்பாடு செய்திருப்பார்கள்
என்று நினைக்கிறேன்.
நீண்ட பயணமானதால் ஹைஃபாவியத் தாண்டியவுடன் ஒரு சிறிய கடைக்கு
முன்பு வண்டியை நிறுத்தினர். டீக்காக
இரண்டு டாலர் பணம் கட்டினேன். சிறிது
நேரம் கழித்து, என் பெயரை அழைத்து, ஒரு கோப்பையில் சுடு நீர் மட்டும்
கொடுத்தார்கள். மேஜை மீது வைத்து
சுவைத்துப் பார்த்தால், உண்மையிலேயே சுடு நீர்தான்! (ஜானி: ஒருவேளை அந்நாட்டு டீ
உங்க வீட்டு சுடு நீர் மாதிரி இருக்குமோனு நினைச்சேன்!)
பிறகுதான் புரிந்தது.
அங்கு தனிப் பொட்டலமாக வைத்திருந்த பால், தேயிலை, சர்க்கரை ஆகியவற்றை
எடுத்து நாமே கலந்து கொள்ள வேண்டுமாம்.
என்னைப் பார்த்து, என் குடும்பத்தினர் ஏளனமாகச் சிரித்தனர். காரணம், நான் காசு கொடுத்து வாங்கிய சுடுநீர்
அருகிலேயே இலவசமாகக் கிடைத்தது!
|
அக்கடையில் மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்றால் மெனுக் கார்டில் விலையே குறிப்பிடாததுதான்! (ஜானி: உலகிலேயே அப்படியொரு மெனுக் கார்டை நான் பார்த்ததே இல்லை அங்கிள்!)
திரும்பும்போது, நான் கண்டறிந்த இன்னொரு விஷயம்... அங்கு
இரவு 7 மணிக்கு மேல்தான் இருட்ட ஆரம்பிக்கிறது.
பெத்லேகேமில் உள்ள 'கோல்டன் பார்க் ரிசார்ட்' எனும் விடுதிக்கு வந்து சேர இரவு 9 மணியாகிவிட்டது. அவ்விடுதியில் இரண்டு நாட்கள் தொடர்ந்து தங்க வேண்டியிருந்ததால், நாங்கள் அழுக்காக்கிய உள்ளாடைகளைத் துவைத்துக் காய வைக்க வசதியாக இருந்தது.
நாங்கள் புனிதப் பயணம் போவதற்கு முன்பு பலரிடம் பல யோசனைகளைப் பெற்ற பிறகே பயணத்துக்கு தயார் செய்தோம். அப்பொழுது ஒருவர், “உள்ளாடைகளை நீங்க பெத்லேகேமில் துவைச்சிக்கலாம். ஏன்னா அங்க இரண்டு நாட்கள் தங்குவீங்க. மேலும் அப்படி துவைக்கக் கூடாதுனு சில ஓட்டல்களில் விதிகள் இருந்தாலும், அறைக்குள்ளேயே காய வெச்சா, கண்டுக்க மாட்டாங்க!” என்று கூறி அனுப்பினார். அவர்கள் இது வரை மூன்று முறை புனித பூமிக்கு சென்று வந்தவர்கள்.
8.5.2017:
அன்று காலை எங்களை ஒரு மலை மீது ஏற வைத்தனர். உச்சியில் உள்ள ஆலயத்துக்கு போகும் வழியில் மேலும் ஒரு மேரியின் ஊற்றைப் பார்த்தோம். ஆனால் அது பருகுவதற்கு ஏற்றதல்ல. மலை மீதுள்ள விஸிடேஷன் எனும் அந்த ஆலயம் இருக்கும் இடத்தில்தான் மேரி, அவருடைய உறவினரான எலிசபெத்தைச் சந்தித்த இடம். எலிசபெத்து யோவானைக் கருவுற்ற காலம்.
மேலும் யோவான் பிறந்த இடத்திலும் ‘எயின் கரேன்’ எனும் மற்றொரு ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.
அந்த நுழைவாயுக்குள் நுழைந்தவுடன் அழகான சிலை… மேரியும்,
எலிசபெத்தும் நெருக்கமாக நின்று ஏதோ முக்கியமான விஷயமாக பேசுவதுபோல் அமைந்திருக்கிறது.
புனித பயணத்தின் போது, மேற்கண்ட இடம் மட்டுமே எடை அதிகமான நபர்களுக்கும், வயதானவர்களுக்கும் ஒரு சவாலான இடமாகும். மேலும் புனித பூமி மலைப்பாங்கான இடமாக இருப்பதால், நிறைய இடங்களில் மேடான பகுதிக்கு ஏறுவதும், படிக்கட்டுகளில் ஏறுவதுமாக நம் உடலுக்கு அதிக உடற்பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது. (ஜானி: மொத்தத்தில நம்மை பெண்டெடுக்குதுனு சொல்லுங்க அங்கிள்!)
புனித நாடுகளுக்கு நம்மைப் போன்ற யாத்திரிகர்கள் நிறைய வருமானமும், அந்நிய செலாவணியும் பெற்றுத் தந்தாலும், அங்குள்ள அரசாங்கங்கள் இயங்கும் படிக்கட்டுகளும் (Escalator), மின் தூக்கிகளும் (Lift), கம்பி வட ஊர்தியும் (Cable Car) அமைத்துக் கொடுக்கும் பட்சத்தில், பருமனான ஆட்களுக்கும், மற்றும் வயதானவர்களுக்கும் உண்மையிலேயே வசதியாக இருக்கும். சரி… மீண்டும் விஸிடேஷன் ஆலயத்துக்கு வருவோம்…
சில வருடங்களுக்குப் பிறகு ஏரோது அரசன் இஸ்ரவேலரைக் கொலை செய்ய வகை தேடியபொழுது அங்குள்ள ஒரு கல்லுக்குப் பின்னால் யோவான் மட்டும் ஒளிந்திருந்ததாக எங்கள் வழிகாட்டி கூறினார். ஆனால் இணைய தளமோ யோவானும், எலிசபெத்தும் ஒளிந்திருந்ததாக கூறுகிறது. அந்தக் கல்லும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
பாவம் யோவான்!
மிகவும் கடினமான வாழ்க்கை. கடைசியில்
வருத்தப்படக்கூடிய முடிவு. எல்லாம், இயேசுவுக்காக!
யோவானிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய பணிவு. எனக்கும் அப்பணிவைத் தரும்படி பல முறை கடவுளிடம்
வேண்டியிருக்கிறேன்.
விஜயம்
ஆலயத்துக்கு (Visitation Church) நாங்கள் விஜயம் செய்யும்போது ஒரு விவாதம் ஏற்பட்டது. சோனியா (வழிகாட்டி) எலிசபெத் ஊருக்குள் இருந்த தன்
வீட்டை விட்டு விட்டு ஊரைத் தாண்டியுள்ள அந்த மலையில் தங்கினதற்கு ஒரு காரணத்தை முன்
வைத்தார். அவர் வயதான காலத்தில் கருவுற்றதால்,
மற்றவர்கள் தன்னைக் கேளியாகப் பார்ப்பார்களோ என்ற காரணத்தால் தனிமையான இடத்தில் தங்கினார்
என்று கூறினார்.
இதற்காக, லூக்கா 1 : 24-25-ஐ மேற்கோள் காட்டினார். “ஜனங்களுக்குள்ளே
எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல்
கடாட்சம் வைத்து, எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம்
வெளிப்படாதிருந்தாள்.”
எங்களுடன்
வந்திருந்த அருட்தந்தை அவர்கள், “வேதாகமத்தில் அப்படிப் போடவில்லை. மாறாக, அவர் மகிழ்ச்சி அடைந்ததால் கடவுளுக்கு நன்றி
செலுத்தினார். அதனால் தன் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்திருப்பார். தனியாய் இருந்ததற்கு அது காரணமல்ல!” என்று கூறினார்.
காலையில்
எழுந்தவுடன் ஆலயத்துக்கு போவதற்கு முன்பு ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்கள். சிறிய கடை.
விலையோ அதிகம். ஆனால் கடைக்கு வெளியே
ஒருவர் விதம் விதமான கைப்பைகள் பல வண்ணங்களில் வைத்திருந்தார். விலையும் சற்று மலிவாக இருந்தது. பரிசளிக்க நிறைய பைகளை என் குடும்பத்தினர் வாங்கினர்.
பிறகு
விஜயம் ஆலயத்துக்கு பேருந்து மூலம் சென்றோம்.
அப்பொழுது பேருந்தில் நான் கீழ்க்கண்ட நகைச்சுவையை என் அருகில் அமர்ந்திருந்த
குழுவினருடன் பகிர்ந்தேன். அவர்கள் நன்கு ரசித்தார்கள்.
😝 என் உறவினர் ஜப்பானிலிருந்து ஒரு டீ ஷர்ட் வாங்கி
வந்தார். பல வண்ண நிறத்தில் இருந்த அந்த
டீ ஷர்டில் ஜப்பானிய மொழியில் ஏதோ எழுதியிருந்ததாம்.
அந்த டீ ஷர்ட்டைப் பார்க்கும் அனைவரும் அதன்
அழகைப் பாராட்டிவிட்டு, ஜப்பானிய மொழியில் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவர் வீட்டிலும், அலுவலகத்திலும் அதே கேள்விதான். அப்படி என்ன எழுதியிருப்பார்கள் என்பதை அறிய அவருக்கும்
ஆசை வந்துவிட்டது.
எனவே வேறு வழியில்லாமல் ஜப்பான் நாட்டு தூதரக
அலுவலகத்துக்கு சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அங்கிருந்தவர், “அதில் மேட் இன் இந்தியா
என்று எழுதியிருக்கு!” என்றனர். (ஜானி: அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!)
|
பிறகு அப்சலோமின் கல்லறை வழியாக பழைய எருசலேமைப் பார்க்குமிடத்துக்கு சென்றோம். அங்கு முழூக் குழுவின் புகைப்படம் எடுக்கப்பட்டது. மதிய வெயில் காரணமாக அப்படத்தில் யாருடைய முகமும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அங்கு நின்று பார்க்கும்போது பழைய எருசலேமையும், எருசலேமின் ஆலயத்தின் தங்க நிறத்தில் உள்ள குவிமாடத்தையும் (Dome) பார்க்கும் காட்சிகள் கண்களைக் கவர்ந்தன.
இந்த இடம் எருசலேமின் முக்கியமான எல்லைக் குறி (லேண்ட் மார்க்) மட்டுமல்ல. சாலமோன் ராஜாவின் ஆலயம் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. பார்ப்பதற்கு அற்புதமானது. இந்த ஆலயம் பல முறை கைமாறி இப்பொழுது முகமதியரின்
கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
ஒலிவ மலையில் உள்ள அடக்கம் பண்ணும் இடம் வேதாகமக் காலத்திலிருந்து இக்காலம் வரை இறந்தவர்களைப் புதைப்பதற்கு வசதியாக இருக்கிறது. மேலும் இங்குதான் வேதாகமத்தில் உள்ள எல்லா முக்கிய நபர்களையும், இராஜாக்களையும் புதைத்திருக்கிறார்கள். சக்கரியா, அப்சலோம் ஆகியவர்களையும் சேர்த்து, இங்கு சுமார் 150,000 கல்லறைகள் இருக்கின்றன.
கொஞ்சம் மேட்டுப் பகுதியில் ஹக்காய், சக்கரியா, மலாச்சி போன்றவர்களின் கல்லறைகளும் இடம் பெற்றிருக்கின்றன.
மேலும் மதிற்சுவத்திற்கு அருகில் உள்ள பெரிய கற்களின் மீது இயேசு நடந்திருப்பார் என்று எங்கள் வழிகாட்டி கூறினார்கள். அங்கு தெரியும் யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே கடவுளின் இரண்டாவது வருகையின்போது “நான் சகல ஜாதியாரையும் கூட்டி அவர்களை இறங்கிப்போகப் பண்ணுவேன்!” என்று கடவுள் சொன்னதை யோவேல் 3 : 2 கூறுகிறது.
பிறகு ஆண்டவர் சிலுவையில் அறையப் படுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்த கெத்சமனே தோட்டத்திற்கு சென்றோம். எண்ணெய்
எடுக்கும் செக்காலை ஒன்று ஒலிவத் தோட்டம் உள்ள மலையின் கீழ் இருந்தமையால், இத்தோட்டத்தின்
பெயரே கெத்செமனே (செக்காலை) என்று அழைக்கப்பட்டது. ஆம்! கெத்செமனே
என்றால் செக்காலை என்று அர்த்தம்.
அது ஒலிவ மலை என்ற பெயருக்கேற்றவாறு, நிறைய ஒலிவ மரங்கள் இருக்கின்றன. மற்றபடி மலர்கள் குறைவு. கெத்சமனேயில் உள்ள ஒலிவ மரங்கள் மொத்தம் எட்டு. இவற்றை கார்பன் டேட்டிங்க் முறையில் சோதனைச் செய்தபோது, அவற்றின் வயது 1,000 வருடங்கள் என்று கருதுகிறார்கள். அம்மரத்தின் கிளையை ஒடித்து வைத்தால், அதுவும் முளைக்குமாம். எனவே அங்குள்ள மக்கள் அந்த மரங்களின் வயது 2,000 வருடங்களாக இருக்கக் கூடும் என்று நம்புகின்றனர்.
அது ஒலிவ மலை என்ற பெயருக்கேற்றவாறு, நிறைய ஒலிவ மரங்கள் இருக்கின்றன. மற்றபடி மலர்கள் குறைவு. கெத்சமனேயில் உள்ள ஒலிவ மரங்கள் மொத்தம் எட்டு. இவற்றை கார்பன் டேட்டிங்க் முறையில் சோதனைச் செய்தபோது, அவற்றின் வயது 1,000 வருடங்கள் என்று கருதுகிறார்கள். அம்மரத்தின் கிளையை ஒடித்து வைத்தால், அதுவும் முளைக்குமாம். எனவே அங்குள்ள மக்கள் அந்த மரங்களின் வயது 2,000 வருடங்களாக இருக்கக் கூடும் என்று நம்புகின்றனர்.
வெகு அருகிலேயே ஒரு பிரமாண்டமான ஆலயம் (Church of All Nations அல்லது Church of Agony). இந்த ஆலயத்தை 16 நாடுகள் சேர்ந்து கட்டியதால் இப்பெயர் வந்தது. அதன் முகப்புறம் கொள்ளை அழகு. அங்கு அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
அந்த ஆலயத்திற்குள், எங்கள் குழுவிலிருந்த, திரு. இராஜசேகரன் என்பவரிடம் ஒரு குட்டி நேர்காணல் நிகழ்வைக் காணொலி (Video) எடுத்திருக்கிறேன். அதில் ஒரு நல்ல செய்தி கொடுத்திருப்பதைத் தவறாமல் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஒலிவ மலையில் பார்க்க வேண்டிய இடங்களாவன… இயேசு விண்ணேற்றம்,
கர்த்தரின் பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுத்த இடம், குருத்தோலை பவனி சென்ற இடம்,
இயேசு அழுத இடம், கெத்சமனே, அனைத்து நாடுகளின் ஆலயம், மேரியின் கல்லறை, முதலியன.
பிறகு டொமினஸ் ஃப்லெவிட் எனும் ஆலயத்துக்கு செல்ல திட்டமிட்டோம். ஆனால் முடியவில்லை. இது ஒலிவ மலையின் சறுக்கத்தில் மேற்குப் புறத்தில் உள்ளது. இங்கு இயேசு எருசலேமின் எதிர்காலத்தை நினைத்து அழுத இடம்.
இந்த
உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சி முதல் குருத்தோலை ஞாயிறு அன்று இயேசு எருசலேமுக்குள் வெற்றித்
திருவிழா கொண்டாடும் நோக்கத்துடன் நுழைந்தபோது ஏற்பட்டது. அவர் வந்த சாலையில் தங்கள் துணிகளை வீசி எறிந்து
“கர்த்தரின் பெயரில்
வருகின்ற அரசரை தேவன் ஆசீர்வதிப்பாராக!” (லூக்கா 19 : 38) என்றனர்.
அப்பொழுது
அவர் நகரத்தைப் பார்த்து, அழுது, இப்படியாக தீர்க்க தரிசனம் கூறினார்.
“உன் பகைவர்கள் உன்னைச்
சுற்றிலும் ஒரு மதிலை எழுப்பும் காலம் வந்து கொண்டிருக்கிறது. உன் பகைவர்கள் உன்னை
எல்லாப் பக்கங்களிலிருந்தும் வளைத்துக் கொள்வார்கள். அவர்கள் உன்னையும் உன்னிலுள்ள எல்லா மக்களையும் அழித்து
விடுவார்கள். உன் கட்டிடங்களில் உள்ள கற்களில் ஒன்றும் ஒன்றின் மேல் ஒன்று நிலைத்திருப்பதில்லை.
தேவன் உன்னை மீட்பதற்காக வந்த காலத்தை நீ அறியாததால் இவையெல்லாம் நடக்கும்!” (லூக்கா 19 : 43 & 44)
அவர் சொன்ன 40 வருடங்களுக்குள்,
அதாவது கி.பி.70-இல், அவருடைய தீர்க்க தரிசனம் நிறைவேறிற்று. ரோமர்கள் எருசலேமின் மீது படையெடுத்து ஆறு மாதங்கள்
போரிட்டு, ஆலயத்தை எரித்து, நகரத்தை தரைமட்டமாக்கிவிட்டனர்.
'ஊருக்குள்ளே இருந்த விடுதியில் கொடுத்த மதிய உணவில் ஒரு சப்பாத்தி போல அரை வட்ட ரொட்டி இருந்தது. அதன் மூடப்படாத ஓரங்களை விரித்தால் நடுவில் காலியிடம். அதில் நமக்குப் பிடித்த காய்கறிகளை அடைத்து அப்படியே சாப்பிடலாம். வாவ்!
பிறகு பெதஸ்தா எனும் குளத்தைப் பார்த்தோம். ஆனால் அதில் தண்ணீர் இல்லை. அக்குளத்தில் அக்காலத்தில் அதிகாலையில் தூதன் தண்ணீரைக் கலக்கிவிட்ட பிறகு, யார் முதலில் குதிக்கிறார்களோ அவர்கள் சுகம் பெற்றார்கள். இயேசு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனுக்கு ஓய்வு நாளன்று சுகம் கொடுத்த இடம்.
பெதஸ்தா குளத்திற்கு அருகில் உள்ள ஆலயத்தின் பெயர் ஆன். மேரி பிறந்த இடம். மேலும் அவருடைய தாயும், தந்தையும் (ஆன் மற்றும்
ஜோச்சிம்) வாழ்ந்த இடம். அந்த ஆலயத்தின்
சிறப்பு என்னவெனில், ஐந்து பேர் பாடினாலும் ஐநூறு பேர் பாடின மாதிரி ஒலி, மற்றும்
எதிரொலியை வழங்கும் அற்புதமான இடம்.
“ஜனங்கள்,
“கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம்” என்று கூறியபோது நான் மிகவும்
மகிழ்ந்தேன். இதோ, நாங்கள் எருசலேமின் வாசல்கள் அருகே நின்று
கொண்டிருக்கிறோம்!” (சங்கீதம் 122: 1-2) என்று தாவீது சொன்னதுபோல், நாங்களும்
எருசலேமின் வாசலுக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தோம்.
எருசலேம்
21-ஆம் நூற்றாண்டின் நவ நாகரீகத்தையும், 4,000 வருடங்களின் பழமை வாய்ந்த சரித்திரத்தையும்
குறுக்கே சங்கமிக்கும் ஒரு புதிய கலவையாக பரிணமளிக்கிறது. சரித்திரப் புகழ் வாய்ந்த பழைய எருசலேமையும்,
நவீன வாழ்க்கை வாழும் மக்களையும் ஒரு சேரப்பார்ப்பது புதிய அனுபவமாகும். வண்டியில் போகும்போது, பழைய கலாச்சாரத்தையும்,
தொல் பொருள் ஆராய்ச்சி செய்யும் இடங்களையும், உலகின் பல நாட்டவர்களையும் பார்ப்பது
மற்றொரு அனுபவமாகும்.
பழைய
எருசலேமுக்குள் செல்ல 8 வாயில்கள் உள்ளன.
அவையாவன: 1) தமஸ்கு வாயில் 2) ஏரோது வாயில் 3) ஸ்தேவான் (அ) சிங்க வாயில்
4) பொன் வாயில் 5) கழிவுப் பொருள் வாயில் 6) சீயோன் வாயில் 7) யோப்பா வாயில் 8)
புதிய வாயில்.
கீழே
ஒரு பெரிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறேன்.
வாருங்கள் பார்ப்போம்!
4,000 ஆண்டுகளுக்கு முன்பு
ஆபிரகாமிடம் அவருடைய ஒரே மகனாகிய ஈசாக்கைக் கர்த்தருக்கு பலியிட சொன்னபோது,
ஆபிரகாமும் அப்படியே செய்ய எத்தனித்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் அருகிலுள்ள செம்மறியாட்டை ஈசாக்குக்கு பதிலாக
பலியிடும்படி கடவுள் கட்டளையிட்டார்.
அப்படியே அவரும் அதனைத் தகன பலியாகச்
செலுத்தினார். ஆதியாகமம் 22 : 14-இல்
கூறியபடி, “ஆபிரகாம் அந்த இடத்துக்கு யெகோவா-யீரே என்று பெயர் வைத்தார். அதனால்தான் ‘யெகோவா தன்னுடைய மலையில்
கொடுப்பார்’ என்று இன்று வரை சொல்லப்படுகிறது.”
“யெகோவா தன்னுடைய மலையில் கொடுத்தார்”
என்றல்லவா இருக்க வேண்டும். தகன பலி
ஏற்கனவே முடிந்ததால், கடந்த காலத்தில்தானே அவ்வாக்கியம் அமைந்திருக்க வேண்டும்.
மேலும் அதே அதிகாரம் 2-ஆம் வசனத்தில்,
ஈசாக்கை மோரியா தேசத்தில் உள்ள மலையில் தகன பலியாகக் கொடு என்று கடவுள் கூறுவதாகப்
பார்க்கிறோம். இது நடந்தது கி.மு.2000-ஆம்
ஆண்டில்.
ஆயிரம் வருடம் கடந்து வாருங்கள். சாலமோன் எருசலேமில், அதாவது அதே மோரியா மலையில்
யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்.
அவருடைய தகப்பன் தாவீதுக்கு யெகோவா தரிசனம் தந்த இடத்தில் அதைக் கட்ட
தொடங்கினார். (2 நாளாகமம் 3 : 1)
மேலும் யோவான் 1 : 29-இல், யோவான்
இயேசுவை, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்று
வர்ணிக்கிறார்.
ரகசியம் 1:
ஆபிரகாம் காலத்தில் வனாந்தரத்துக்கு
நடுவில் இருந்த மோரியா மலையும், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு எருசலேமில் சாலமோன்
கட்டிய ஆலயமும் ஒரே இடம்தான். அதாவது அதே
மோரியா மலையில்தான்.
ரகசியம் 2:
கி.மு. 2000-இல் ஆபிரகாம் தன் ஒரே மகனை
பலியாகக் கொடுக்க எத்தனித்தது மோரியா மலை.
இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு கடவுள் தன் ஒரே பேரான குமாரனை (தேவ
ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்பட்டவர்) உலகத்தின் ரட்சிப்புக்காக பலியாகக்
கொடுத்ததும் அதே மோரியா மலைதான். ஆபிரகாம்
“யெகோவா (பலியைத்) தன்னுடைய மலையில் கொடுப்பார்” என்று கூறிய தீர்க்கதரிசனம்
நிறைவேறிற்று.
சரி... இந்த ஏழு வாயில்களில் அழகான வாயிலான பொன் வாயிலைப் பற்றி பார்ப்போம். இவ்வாயிலின் அருகே
பேதுரு நடக்க முடியாத ஒரு பிச்சைக்காரனுக்கு சுகமளித்தார். (அப்போஸ்தலர் 3:1-10)
ஆனால் இப்பொன்வாயில், (எருசலேமின் கிழக்கு வாசல்) ஏன்
மூடப்பட்டுள்ளது?
கிறிஸ்து
பிறப்பதற்கு 572 ஆண்டுகளுக்கு முன்பு, யூத ஆசாரியர் எசேக்கியேல் உரைத்த
தீர்க்கதரிசனம்,
“அப்பொழுது
கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருக்கும்;
ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள்
பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டு இருக்க வேண்டும் என்றார்!” (எசேக்கியேல்
44:1-2)
இந்த
தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு 600 ஆண்டுகள் கடந்தன. அந்த கிழக்கு வாசல் அருகே
திரளான ஜனங்கள், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர்
ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” என்று ஆர்ப்பரிக்கும் காலம் வந்தது. அப்பொழுது இயேசு அந்தக் கிழக்கு வாசலை கழுதை
குட்டியின் மேல் அமர்ந்தவராய் கடந்து செல்கிறார்!
எருசலேமிற்குள்
பிரவேசித்த அவர், சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்து, பரலோகத்திற்கு
எழுந்தருளி சென்று விட்டார். ஆனால் யூதர்கள் அவரை மேசியா என்று ஏற்கவில்லை.
இயேசு பரமேறி
1400 வருடங்களுக்கு பிறகு எருசலேம் படையெடுக்கப்பட்டு இஸ்லாமியர்களின்
கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. சுல்தான் சுலைமான் எருசலேமின் மதிற்சுவர்களை
சீர்படுத்தனார்.
“கிழக்கு வாசல்
வழியாய் மேசியா வருவார். அவர் நிமித்தமாய் யூதர்களுக்கு சுதந்திரமும் ராஜ்யமும்
அதிகாரமும் மீண்டும் தரப்படும்!” என்பது யூதர்களின் நம்பிக்கையாய் இருந்தது. இதனை
அறிந்து கலங்கிய சுல்தான் சுலைமான் உத்தரவிட்டபடி, எருசலேம் கிழக்கு வாசல்
சுண்ணாம்பு கற்களால் மூடப்பட்டது.
அந்த வாசல்
அடைக்கப்பட்டு இதோடு 500 வருடங்களுக்கு மேலாகி விட்டன. இன்று வரை அந்த வாசல்
திறக்கப்படவில்லை. சுலைமானின் செயலினால் எதிர்பாராமல் நிறைவேறிய வேதாகம தீர்க்க
தரிசனத்தை அறிந்த இஸ்லாமியத் தலைவர்கள் மீண்டும் அந்த வாசலை உடைத்து தீர்க்கதரிசனத்தை
முறிக்க முயற்சிகள் மேற்கொண்டனர்.
1917-இல்
எருசலேமை ஆக்கிரமித்திருந்த இஸ்லாமிய ராணுவ வீரர்கள் கிழக்கு வாசலின் வழியை
அடைத்து நிற்கும் பெருங்கற்களை உடைக்க நாள் குறித்தனர். அதே நாள், எருசலேமை
ஆங்கிலேயர்கள் படையெடுக்க நேர்ந்தது. இஸ்லாமிய படைகள் வீழ்த்தப்பட்டு எருசலேம்
ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது! இதுவரை அதனை திறக்க மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
எருசலேமின்
கிழக்கு வாசல் மீண்டும் திறக்கப்படுமா?
மேசியாவின்
இரண்டாம் வருகை நேரிடும் போது, கிழக்கு வாசல் மீண்டும் திறக்கப்படும்.
எருசலேமிற்குள் சென்ற இயேசு மீண்டும் அதன் வழியாய் வெளியே வருவார். அவரது பாதங்கள்
ஒலிவ மலையின் மேல் நிற்கும். உலக முடிவு
அன்று சம்பவிக்கும் என்று வேதம் கூறுகிறது. (சகரியா 14:3-5)
சரி... மீண்டும் பயணத்திற்கு வருவோம்!
பிறகு
இயேசு சிலுவையை எடுத்துக் கொண்டு நடந்த பாதையை அடைந்தோம்.
வயா டோலரோஸா
(Via Dolorosa) என்றால் லத்தீன் மொழியில் வருத்தத்தின் வழி அல்லது சோக வழி அல்லது
துன்பப்பட்ட வழி என்று அர்த்தம்.
பொந்தியு
பிலாத்து “நான் இயேசுவிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை!” என்று கூறி கை கழுவின
இடத்தைப் பார்த்தோம். அந்த இடம் மிகவும் சாதாரணமாக
இருந்தது. நான் படங்களில் பார்த்த பிரமாண்டத்தையோ,
மனதுக்குள் கற்பனை செய்து பார்த்த ‘பந்தா’வையோ அங்கு காண முடியவில்லை. காலத்தின் கோளாறினாலும், பல போர்கள் நடந்ததாலும்
அவ்விடம் தரைமட்டமாகியிருக்கலாம்.
அங்கிருந்து இயேசு சிலுவையை சுமந்து கொல்கொதாவை நோக்கி நடந்தார். அவர் நடக்கும் வழியில் உள்ள 14 இடங்களிலும் பிரார்த்தனை செய்தவாறு கடந்தோம். குறுகலான அவ்வழியின் இரு பக்கங்களிலும் கடைகள் நிறைந்திருக்கின்றன.
அக்கடைகளை அகற்றி புனிதமான அவ்விடங்களைச் சீர்படுத்தி வைத்திருந்தால், நம்மைப் போல் அங்கு வரும் யாத்திரிகர்கள் தொழுவதற்கு வசதியாயிருக்கும். அவற்றைப் பார்க்கும்போது இயேசு சாட்டையை எடுத்து “என் வீட்டைக் கள்ளர் குகையாக்கிவிட்டீர்களே!” என்று கூறி விரட்டிய எருசலேம் ஆலயம்தான் நினைவுக்கு வருகிறது.
அங்கே
கடை வைத்திருக்கும் முகமதியர்களுக்கு இயேசு ஒரு தீர்க்கதரிசி மட்டுமே. அதனால் அவ்விடத்திற்கு தர வேண்டிய மதிப்பு, மரியாதை
ஆகியவற்றைக் கொடுக்காமல் இருக்கலாம். அந்த
வழி மிகவும் இடுக்கமான வழி. இரண்டு பக்கங்களிலும்
வரிசையாகக் கடைகள்.
அது மட்டுமல்ல…
சிறுவர்கள் வேகமாக இரு சக்கர வாகனத்தில் (சைகிள்) அந்த இடுக்குகளில் வருவது, மிகவும்
அபாயகரமானது. மேலும் அது அந்நாட்டிற்கு வரும்
பக்தர்களிடம் அச்சிறுவர்கள் காட்டும் அவமரியாதையையும், அலட்சியத்தையும் காட்டுகிறது.
ஐந்தாவது
ஸ்டேஷனில் ஒரு கல்லை சுவரில் பதித்து வைத்துள்ளனர். காரணம் மிகவும் களைத்துப் போன இயேசு அக்கல்லில்
தன் கையை ஊன்றி சற்றே இளைப்பாறினாராம்.
ஒன்பதாவது
ஸ்டேஷனில் ஒரு பெரிய சிலுவை வைக்கப் பட்டிருந்தது. அது உண்மையான சிலுவையைப் போலிருந்தது. அதை நிமிர்த்தித் தூக்க முயற்சித்தால், ‘ஊகும்!’
நகரவே மறுத்தது. அருகிலிருந்தவர்கள், “உண்மையான
சிலுவையின் எடை இன்னும் அதிகம்!” என்றனர்.
அந்த
14 ஸ்டேஷன்களின் மொத்த தூரம் 600 மீட்டர்.
பக்தர்கள் அனைவரும் இந்த 14 இடங்களுக்கும் சென்று, கிறித்தவ பாடப்புத்தகங்களைப்
படித்து, பாடி, பிரார்த்தனை செய்வது மிகவும் முக்கியமான வழிபடுதலாகும். முக்கியமாக வெள்ளிக்கிழமைகளிலும், லெந்து நாட்களிலும்
பக்தர்கள் இந்த 14 இடங்களுக்கும் வருவது புனிதமானச் செயலாகக் கருதப்படுவதால் நல்ல கூட்டம்
வருகிறது.
எனவே,
இதே சாயலில் மற்ற நாடுகளிலும் 7 முதல் 30 வரையான ஸ்டேஷன்களை உருவாக்கியிருக்கின்றனர்.
முக்கியமாக இத்தாலியிலுள்ள பொலொக்னாவிலும், மற்ற ஐரோப்பா நாடுகளிலும், பிலிப்பைன்ஸிலும்
இதைப் போலவே கட்டியுள்ளனர். சென்னையில் உள்ள
சின்னமலை கத்தோலிக்க (Our Lady of Health Church) ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள சிறு
மைதானத்திலும் அருகருகே இப்படி கட்டியிருக்கிறார்கள்.
எங்கள் குழுவில் வயதானவர்கள் அதிகம் இருந்தாலும் அனைவரும் தூரமான இடங்களுக்கும், உயரமான மலைப் பகுதிகளுக்கும் நடக்க முடிந்ததற்கு காரணம்… இயேசுவின் மீதுள்ள பாசம், அவர் நடந்த இடங்களில் நாமும் நடக்கிறோம் எனும் உடலைச் சிலிர்க்க வைக்கும் எண்ணம் ஆகியவை மட்டுமல்ல. ஆவல்! இன்று என்ன நடக்கப் போகிறது… என்ன பார்க்கப் போகிறோம் என்ற ஆவல்தான் நம் வாழ்க்கையில் உற்சாகத்தைக் கொடுக்கும் பெரும் உந்து சக்தியாக விளங்குகிறது.
இருப்பினும் நாங்கள் அன்று அதிக தூரம் நடந்து வந்ததாலும், 12 ஸ்டேஷன்களில் (இயேசு சிலுவை எடுத்துக் கொண்டு நடந்து செல்லும்போது, நின்ற இடங்கள்) நின்று ஆங்காங்கே வேத பாடங்களைப் படித்து, ஜெபங்களை ஏறெடுத்ததாலும், மிகவும் களைத்துப் போயிருந்தோம். என்னாலும் வேகமாக நடக்கமுடியவில்லை. அதனால் கடைசியில் நடந்து வந்தேன். என்னோடு ஓயாசிஸ் நிறுவனத்தின் ஊழியர் தாமஸ் பாலும் வந்தார்.
😆 வெகு தூரம் நடக்கும்போது, எங்கெங்கே உட்கார இடம் உள்ளதோ அங்கெல்லாம் உட்கார்ந்துக் கொள்வேன். அப்படி ஒரு இடத்தில் அமரும்போது, ஒரு பெண், “ரொம்ப டயர்டா அங்கிள்?” என்றாள்.
நான் விட்டுக் கொடுப்பேனா? “நோ நோ… ஐ எம் ரீசார்ஜிங்!” என்றேன்.
ஜானி: என்னோடு சேர்ந்து, நீங்களும் பேசக்கத்துக்கிட்டீங்க அங்கிள்!”
|
அப்பொழுது எங்கள் குழுவில் உள்ள 55 வயதுக்கு மேற்பட்ட சற்றே பருமனான ஒரு பெண், “என்னால் இனி கொஞ்சம் கூட நடக்கமுடியாது!” என்று எங்களிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார். உடனே நான், “இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கு… மொள்ளமா வாங்க!” என்றேன். உண்மையில் அங்கிருந்து எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்றோ, எங்கே செல்கிறோம் என்றோ எனக்குத் தெரியாது.
நான் சொன்னதைத் தாமஸும் வழி மொழிந்ததால், அப்பெண் கஷ்டப்பட்டு நடக்கத் துவங்கினார்.
இயேசுவின்
கல்லறையும் (ஹோலி செபுல்கர்), சிலுவையில் அறைந்த இடமும் (கல்வாரி மலை) ஒரே கட்டடத்துக்குள்
அமைந்திருந்தன. மேலும் அதற்குள்ளாகவே கடைசி
ஐந்து ஸ்டேஷன்களும் இருந்தன. அவையாவன: இயேசுவின்
துணியைப் பிடுங்குதல் (10), அவரை சிலுவையில் அறைதல் (11), சிலுவையில் அவர் உயிர் துறத்தல்
(12), அவருடைய உடலைக் கீழே இறக்கி வைத்தல் (13), மற்றும் இயேசுவை கல்லறையில் வைத்தல்
(14).
கல்லறைக்கு
முன்பு நீண்ட வரிசையில் பல நாட்டவர்கள் நின்றுக் கொண்டிருந்தனர். கல்லறைக்கு உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. உள்ளே சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்ய அனுமதி
உண்டு.
சிலுவையில்
அறைந்த இடத்துக்கு செங்குத்தான படிகளில் ஏற வேண்டியிருந்தது. ஆனால், பூட்டப்பட்டிருந்த அந்த ஆலயத்தில் பிரார்த்தனை
நடந்துக் கொண்டிருந்ததால், ஒரு மணி நேரத்துக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்ட பொழுது இயேசு எவ்வளவு கஷ்டப்பட்டார்
என்று நான் இணைய தளத்தில் படித்தது அப்பொழுது நினைவுக்கு வந்தது.
இயேசுவின்
இரு கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறைந்தார்கள் அல்லவா? அதனால் அவருக்கு ஏற்பட்ட வலி சொல்லி மாளாது. சிலுவையில் நேராக நிற்க முயற்சிக்கும்போது, அவருடைய
எடை முழூவதையும் அவர் கால்கள் தாங்குகின்றன.
அதனால் அவருடைய கால்கள் வலியால் துடித்திருக்கும்.
‘சரி…
உடலை சற்றே முன்னால் தள்ளலாம்” என்று முயற்சித்தால், அவருடைய எடையை இரண்டு கைகளும்
தாங்க நேரிடும். கைகளில் உயிர் போகிற வலியால்
துடித்திருப்பார்.
19-ஆம் நூற்றாண்டில் அக்கல்லரையை, பாதுகாப்பிற்காக ஒரு இரும்பினால் செய்யப்பட்ட பெட்டியினால் மூடி வைத்திருக்கிறார்கள். அக்கல்லரையின் மேல் பகுதியிலுள்ள சலவைக்கல் உடைந்து கீழே விழாமல் இருக்க சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
அங்கே போகும் வழியில் எருசலேமைச் சுற்றியிருக்கும் 4 சுவர்களுள் மேற்குப் பகுதியில் உள்ள யூதர்களுக்கு சொந்தமான ஓலமிடும் சுவரைப் (Wailing Wall) பார்த்தோம். மிகவும் பிரமாண்டமான மதில் சுவர் அது. அங்கு வரும் யூதர்கள், மெஸாயா வரவேண்டுமென்று அழுது புலம்பும் இடமது. கிறித்தவர்கள் நம்பும் இயேசுவை அவர்கள் ஆண்டவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த இடம் சர்ச்சைக்குரிய இடமாகையால், இராணுவர்கள் துப்பாக்கிகளோடு காவல் காக்கின்றனர்.
இந்த மேற்குச் சுவர் அல்லது ஓலமிடும் சுவர் உலகத்தில் உள்ள மூன்று முக்கிய மதத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு சொந்தம் கொண்டாடி பல போர்களைச் சந்தித்த இடம்.
இங்கு வரும் யூதர்கள் தங்கள் தேவைகளை காகிதத்தில் எழுதி இச்சுவருக்கு இடைப்பட்ட சந்துகளில் திணிப்பது வழக்கமாகிவிட்டது. இப்பழக்கம் பல நூற்றாண்டுகளாக புழங்கி வருகிறது. மேலும் இங்குள்ள ஹைஷ் ஹடோரா எனும் நிறுவனத்துக்கு யாராவது தங்கள் தேவைகளை அனுப்பினால், அவர்களே காகிதத்தில் அச்சடித்து அந்த பொந்துகளில் வைத்து விடுவர். மேலும், யாராவது வெளி நாடுகளில் இருக்கும் பட்சத்தில் இணைய தளத்தின் மூலமாகக் கூட அவர்கள் தங்கள் தேவைகளை இந்த நிறுவனத்துக்கு அனுப்பலாம். தேவைகள் அநாகரீகமாயிருந்தால் அவைகள் தடை செய்யப்படும்.
9.5.2017:
இயேசு பிறந்த செய்தியை முதலில் அறிந்த மேய்ப்பர்கள் தங்கியிருந்த குகைக்குள் சென்று பார்த்தோம். அருகிலிருந்த ஆலயத்துக்கும் சென்றோம். அதற்கு அருகில் உள்ள நிலம் ரூத்தின் கணவன் போவாஸுடையது என்று அறிந்து கொண்டோம்.
பிறகு பால் மண்டபம் சென்றோம். ஏழைகளைக் கொடுமை செய்த அந்நாட்களில் இயேசுவின் குடும்பம் எகிப்துக்கு செல்லும் முன், அந்த இடத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது மேரி அன்னை குழந்தைக்கு
பாலூட்டும்போது, ஒரு சொட்டு பால் கீழே சிந்தியவுடன், அந்த இடம் வெள்ளையாக மாறிவிட்டதாகக் கூறுகிறார்கள். அவ்விடம் வந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இயேசு
பிறந்த இடத்துக்கு காலையிலேயே சென்றுவிட்டோம். அங்கிருக்கும் ஆலயத்தின் முகப்பில் பழுது பார்க்கும் வேலை நடக்கிறது. வரிசையில் முதலாவதாக நின்று 90 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அங்கே உள்ள ஆர்தடாக்ஸ் ஆலயம் வழியாகத்தான் செல்ல
வேண்டும். அந்த ஆலயத்துக்குள்ளும் கட்டுமானப்
பணி நடந்து கொண்டிருந்தது. அதற்காகக் கட்டப்பட்டிருந்த
மூங்கில் ஒன்றில் சாய்ந்து கொண்டேன்.
நேரம்
கடந்து கொண்டிருக்கும்போது, நிறைய மேல் நாட்டினர் வந்து கொண்டே இருந்தனர். அப்படி வந்தவர்களுள் ஒரு குடும்பம் தெற்கு கொரியாவைச்
சேர்ந்தது. அக்குடும்பத்தின் 12 வயது சிறிய
பெண், கண்ணாடி போட்டுக்கொண்டு சிங்கப்பூரில் இருக்கும் என் அண்ணனின் பேத்தி மாதிரியே
இருந்தாள்.
நேரம்
போக, அவளிடம் பேச்சுக் கொடுத்தேன். அவள் அழகாகப்
பேசினாள். சிறந்த ஆங்கிலம். சுத்தமான உச்சரிப்பு. அவள் பெயர் என்ன என்று கேட்டேன். அவள் எத்தனை முறை சொன்னாலும், அதை என்னால் கண்டிப்பாக
திருப்பி சொல்ல முடியாது என்பதென்னவோ உண்மை!
அவ்வளவு கஷ்டமான பெயர்!
அவள் எந்த
நாடு என்று கேட்டேன். அவள் என்னைப் பற்றி விசாரித்தாள். நான், “உனக்கு தாஜ்மஹால் தெரியுமா?” என்று பதில்
கேள்வி கேட்டேன். அவள் தலையசைத்தாள். நான், “அது உலக அதிசயத்தில் ஒன்று. அந்த நாட்டிலிருந்துதான் வந்திருக்கேன்! பெயர் இந்தியா!!” என்றேன். அவள் புன்னகை செய்தாள்.
சில நிமிடங்களில்
சிநேகிதியாகிவிட்டாள். என்னோடு புகைப்படம்
எடுத்துக் கொண்டாள். நானும் அவளோடு புகைப்படம்
எடுத்துக் கொண்டேன். மற்றொரு நல்ல அனுபவம்!
சற்று
நேரத்தில் எட்டடி முன்னால் நின்று கொண்டிருந்த என் குடும்பத்தினரோடு பேசியிருக்கிறாள். என் பேரனின் கருப்புக் கண்ணாடியை அவள்தான் எடுத்து
வந்து கொடுத்திருக்கிறாள். பிறகு என் பேரனின்
வயது என்ன என்று கேட்டிருக்கிறாள். “அவன் வயது எட்டா?” என்று கேட்டு புருவத்தை உயர்த்தி, ஆச்சரியப்பட்டிருக்கிறாள். காரணம் அவளைவிட அவன் நல்ல உயரம்!
பிறகு
ஒரு மணி நேரம் கழித்து, அந்த ஆலயத்திலிருந்து வெளியே வந்து மற்ற குழுவினருக்காக காத்துக்
கொண்டிருக்கும்போது, அவள் ஓடி வந்து, “போய்ட்டு வர்றேன் அங்கிள்!” என்று சொல்லிவிட்டுத்தான்
போனாள். இதைப் பார்த்த என் மருமகன், அவளுடைய
மரியாதைக்காகவும், தைரியத்துக்காகவும் அவளை வெகுவாக பாராட்டினார். ‘நம்ப பிள்ளைகள் இப்படி இல்லையே!’ என்று ஆதங்கப்பட்டு
கொண்டார்.
அங்கிருந்து லாசரு, மேரி, மார்த்தா வாழ்ந்த பெத்தானி எனும் வீட்டுக்கு சென்றோம். அதற்கருகில் உள்ள லாசருவின் கல்லறையைப் பார்த்தோம். குறுகலான, ஆனால் உயரமான 28 படிக்கட்டுகளைக் கடந்து, ஒரு குறுகிய இடைவெளியைக் கடந்து கல்லறையை அடைய வேண்டியிருந்தது. அக்குறுகிய இடைவெளியில் முட்டி போட்டு முன்னேறுவதற்குப் பதில், பின்புறம் திரும்பி முட்டி போட்டு பின்னே ஊர்ந்து செல்வது சுலபமாக இருக்கிறது என்று என் மகன் கண்டுபிடித்தான். நானும் அப்படியே செய்தேன்.
மேலும் லாசருவின் கல்லறை வெகு ஆழத்தில் இருந்த காரணத்தால், இயேசு யோவான் 11:43-இல் கூறியபடி, "லாசருவே வெளியே வா!" என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். இச்செய்தியை எங்கள் வழிகாட்டி பகிர்ந்து கொண்டார்.
அங்கிருந்து பேருந்தில் சாக்கடலை அடைந்தோம். அங்கிருந்த விடுதியில் உணவருந்திவிட்டு சாக்கடலில் குளித்தோம். சாக்கடல் ஜோர்தான், இஸ்ரவேல், பாலஸ்தீனம் ஆகிய மூன்று நாடுகளிலும் பரந்திருக்கிறது. அதில் உப்பு 34% உள்ளது. மற்றக் கடலை விட 10 மடங்கு உப்பு அதிகம். கடல் மட்டத்திலிருந்து 1,400 அடி ஆழத்தில் உள்ளதால், உலகிலேயே ஆழமானப் பகுதியாகக் கருதப்படுகிறது. இதைச் சுற்றிலும் புல், பூண்டு முளைக்காது. கடலில் எந்த ஜீவராசியும் வாழாது. ஜோர்தான் நதியிலிருந்து இதற்கு தண்ணீர் கிடைக்கிறது.
ஏரோது மன்னனின் ஆரோக்கிய சுற்றுலாவுக்கான இடம் சாக்கடல்தான். காரணம் இங்கு குளிப்பதால் தோல் வியாதிகள் ஓடியே போய்விடுகின்றன. எனக்கிருந்த சொரிச்சலும், கால் வலியும் பறந்தே விட்டன. ஆனால் குளிக்கும்போது கடும் எரிச்சல். அதைக் கஷ்டப்பட்டுத் தாங்கிக் கொண்டேன்.
இக்கடலிலிருந்து அழகூட்டும் பொருட்கள், மருந்துகள், இரசாயனங்கள், உரங்கள் தயாரித்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் தண்ணீர் வேகமாக குறைந்து வருவதால், உப்பு நீர் செலுத்தும் திட்டத்தை, 2018 முதல் 2021 வரை செயல்படுத்த இருக்கிறார்கள். மழை வருடத்துக்கு 4 அங்குல அளவே.
பல வியாதியஸ்தர்களுக்கு இந்நீர் குணமளிப்பதால், ஜப்பானின் ஒரு நிறுவனம் இதை ஆராய்ந்து வருகிறது. மேலும் இந்நீரின் அடர்த்தி அதிகமாயிருப்பதால், நீச்சல் அடிக்கத் தெரியாதவர்களும் இதில் குளிக்கலாம். ஏனென்றால், அனைவரும், முக்கிய்மாக என்னைப் போலிருக்கும் குண்டானவர்கள் இதில் அழகாக மிதக்கிறார்கள். இது ஒரு விசித்திரமான அனுபவம்; மகிழ்ச்சியானதும்கூட! ஆனால் இத்தண்ணீர் கண்களிலும், வாயிலும் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே யோர்தான் நதியிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டோம். இப்பொழுது சாக்கடல், கலிலேயாக் கடல் ஆகியவற்றிலிருந்து ஒரு சிறிய பாடத்தைப் பார்ப்போம்.
உப்பு அதிகமுள்ளதால் சாக்கடலில் எந்த உயிரும் இல்லை. ஆனால் கலிலேயாக் கடலில் பல உயிர்கள் உண்டு. முக்கியமாக 20 வகையான மீன்களும், பல தாவரங்களும் வசிக்கின்றன. இத்தனைக்கும் இரண்டுமே ஒரே பகுதியைச் சேர்ந்தவை. மேலும் இரண்டுக்குமே யோர்தான் நதியிலிருந்து கிடைக்கும் தண்ணீர்தான்! இரண்டையுமே குளங்கள் அல்லது ஏரிகள் என்று இணையதளம் வர்ணிக்கின்றது. ஆனால் ஏனிந்த பாகுபாடு?
காரணம், யோர்தான் நதி கலிலேயாக் கடலுக்குள் வந்து தங்கிவிட்டு வெளியேறுகிறது. தான் வாங்கும் தண்ணீரைத தாராளமாக வழங்குவதால் ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும் கடல் சார்ந்த மற்ற உயிரினங்களுடன் வாழ்கிறது.
ஆனால் சாக்கடலுக்கு தண்ணீரை வெளியேற்றும் வடிகால் இல்லை. உள்ளே வரும் தண்ணீர் வெளியே செல்ல வாய்ப்பில்லை. யோர்தான் நதியிலிருந்து தண்ணீரை வாங்கும் சாக்கடல், யாருக்கும் தண்ணீரைக் கொடுப்பதில்லை. அதனால் அக்கடலில் எந்தவித வாழ்க்கையும் இல்லை.
நாமும் கலிலேயாக் கடலைப் போல் நாம் பெற்றதை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது, ஆரோக்கியமான, துடிப்பான, சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும். மாறாக நாம் பெற்றதைப் பிறருக்கு கொடுக்காத பட்சத்தில், சாக்கடலைப் போல், நமக்கு எந்த வித மகிழ்ச்சியும் கிடைக்காது.
ஆம்! “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்!” அப். 20:35
அங்கிருந்து பேருந்தில் 236 கி.மீ. தூரம் பயணம்.
அங்கிருந்து பேருந்தில் 236 கி.மீ. தூரம் பயணம்.
எலியாட்
எனும் இடத்தில் எகிப்தின் எல்லைக்குள் சென்றோம்.
இஸ்ரவேலின் கடைசி நகரம் அது. செங்கடலின்
முனையிலுள்ள ஓய்வில்லாத துறைமுக நகரம். எங்கள்
சோதனைக்குப் பின்பு வெளியே வர இரவு 3 மணியாயிற்று. அங்கு எங்களுக்காக புதிய வழிகாட்டி, முகமது காத்துக்
கொண்டிருந்தார்.
பிறகு எகிப்துக்குள்ளே உள்ள டாபா எனும் இடத்துக்கு சுங்க சோதனையை முடித்துவிட்டு சென்றோம். விடுதியின் பெயர் ஸ்ட்ராண்ட் பீச் & கோல்ஃப் ரிஸார்ட்! பிரம்மாண்டமான விடுதி. அங்கே அறை, மற்றும் உணவு விடுதிக்குச் செல்ல, மின்தூக்கி மூலம் கீழே செல்ல வேண்டும். முதலில் 3, 2, 1 என்று கீழ் நோக்கி செல்ல வேண்டும்.
நாங்கள்
தங்கிய விடுதி… அரபு பாணியில் பிரமாண்டமாகவும், ஆடம்பரமாகவும் கட்டப்பட்டது.
அங்கு
விளையாட மேஜை மீது தட்டும் டேபிள் டென்னிஸ், மரப் பலகைக்குள் விளையாட ஹாக்கி போன்ற
விளையாட்டுக்களும் இருந்தன. என் குடும்பத்தினர்
அந்த களைப்பிலும் அந்த விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். என் பேரனோடு ஒரு எகிப்திய குடும்பமும் ஹாக்கி விளையாடினர்.
உணவு விடுதிக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய நாடக மேடை. முதலில் பெல்லி நடனமும், பிறகு எகிப்தில் புகழ் வாய்ந்த டானூரா நடனமும் நடந்தேறின. வட்ட வடிவ துணியை தலைக்கு மேலேயும், இடுப்பிலும் ஒரே சமயத்தில் அழகாக சுத்திக் கொண்டே ஆடுவது டானூரா நடனம். ஜேம்ஸ் பாண்டின் ‘தி ஸ்பை ஹூ லவ்ட் மி’ எனும் படத்தில் இந்நடனத்தைக் காணலாம்.
10.5.2017:
எகிப்தின் ஜனத்தொகை 9 கோடி. அதில் 85% முகமதியர்கள். இந்நாட்டின் 10% ஆசியாவிலும், மீதி 90% ஆப்ரிக்காவிலும் இணைக்கப்பட்டுள்ளது. நாங்கள் சென்ற 30 நாட்களுக்கு முன்பு (7.4.17) ஒரு ஆலயத்தில் குண்டு வெடித்து 44 கிறித்தவர்கள் இறந்துவிட்டார்கள் அல்லவா? அதனால் நாங்கள் சென்ற போது ஒரு பதட்ட நிலை காணப்பட்டது. ஆங்காங்கே இராணுவ வீரர்கள் காவல் காத்தனர். வீரர்கள் காவல் காக்கும் நிலையங்களைப் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று கூறிவிட்டனர். (ஜானி: நாம காமிராவால ஷூட் பண்ணா, அவுங்க கன்னால ஷூட் பண்ணிடுவாங்க! ஜாக்கிரதை!)
டாபாவிலிருந்து 7 மணி நேரம் பயணித்து 422 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கெய்ரோவை அடைந்தோம். போகும் வழியில் கடவுள் மோசேக்கு பத்து கட்டளைகள் கொடுத்த சீனாய் மலையைக் கடந்தோம்.
அவ்வழியே செல்லும் எல்லா வண்டிகளையும் பாதுகாப்பு வளையத்தில் வைத்து ஒன்றாக (கான்வாய் முறையில்) அழைத்துச் சென்றார்கள். அந்த இடங்களில் நர மாமிசம் சாப்பிடுபவர்களின் அச்சுறுத்தல் நிலவுகிறதாக சக பயணி கூறினார். ஆனால் இணைய தளத்தில் தேடினால் அப்படிப்பட்ட செய்திக்குப் பதில் அந்த இடங்களில் தீவிரவாதிகளின் பாதிப்பு இருப்பதாகக் கூறுகிறது.
போகும் வழியில் தேயிலைப் பானம் அருந்த ஒரு இடத்தில் நிறுத்தினார்கள். வெகு நாட்களுக்குப் பிறகு இந்திய டீ சாப்பிட்ட திருப்தி இருந்தது.
இன்னொரு மலையில் மோசே காலத்திலிருந்த ‘தீப்பற்றி எரிந்த செடி’யை வளர்த்து வருகிறார்கள். அதற்கு எரியாத புதர் என்று பெயர். எகிப்திலிருந்து வந்த மோசே ஸிப்போரா எனும் பெண்ணுடைய கால்நடைகளுக்கு கிணற்றுத் தண்ணீரை முதலில் கொடுத்து உதவிய இடம். பிறகு அவளையே மணம் புரிந்தார் மோசே. அந்த செடிக்கு அருகே உள்ள அக்கிணறுக்கு, மோசேக் கிணறு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
மேலும் அங்கே செயின்ட் காதரைன் எனும் ஒரு துறவி மடமும் உள்ளது. அம்மடத்தின் நூலகத்தில் 8,000-க்கு மேல் கிறித்தவப் புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இம்மூன்று இடங்களையும் சுற்றி ஒரு பெரிய மதில் சுவர் போடப்பட்டிருக்கிறது.
அங்கிருக்கும் ஆலயத்தில் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு வெள்ளி நட்சத்திரத்திற்கு அருகில் உள்ள எரியாத புதருக்குப் பக்கத்தில் மோசேயைக் கடவுள் கூப்பிட்டு எகிப்துக்கு அனுப்பினார். ஆனால் அந்த ஆலயம் பொதுவாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.
மேலும் இந்த மடத்துக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காவல் துறையோடு போட்ட சண்டையில் ஒரு காவல் அதிகாரி இறந்துவிட்டார். இந்நிகழ்ச்சி எகிப்தில் உள்ள ஆலயத்தில் குண்டு வீசப்பட்டு 44 பேர் இறந்த அடுத்த இரண்டாவது நாள் நடந்திருக்கிறது. இதை இணையதளத்தில் படித்த பின்பே காவல் துறை நாங்கள் சென்ற போது ஏன் பாதுகாப்பு வளையம் போட்டார்கள் என்று புரிகிறது.
கெய்ரோவுக்கு செல்லும் வழியில் சூயஸ் கால்வாயை தண்ணீருக்கடியில் உள்ள சுரங்கப் பாதை மூலம் கடந்தோம்.
சில வருடங்களுக்கு முன்பு சூயஸ் கால்வாயைப் பற்றி நான் என் புத்தகங்களில் எழுதும்போது, சூயஸ் கால்வாயை ஒரு நாள் கடந்து செல்வேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அக்கால்வாயைக் கட்டியவர் ஃபெர்டினண்ட் எனும் பிரஞ்சு நாட்டவர். அவர் ஒரு முறை கப்பலில் பயணம் செய்தபோது, திடீரென்று ஒரு தொத்து நோய் பரவியது. எனவே கப்பல் மாலுமி, “யாரும் தன் அறையை விட்டு வெளியே வரக்கூடாது!” என்று உத்திரவிட்டார்.
அறையில் அடைபட்ட ஃபெர்டினண்ட் நேரத்தை வீணாக்காமல் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். அதில் ஒரு புத்தகத்தில், மத்திய தரைக் கடலையும், செங்கடலையும் இணைத்து கால்வாய் கட்டினால் 7,000 கிலோமீட்டர் தூரம் சுற்றி வராமல், குறுக்கு வழியில் கப்பல் போக்குவரத்து செய்ய முடியும் என்று பல தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதைப் படித்து மகிழ்ச்சி அடைந்தவர், அந்த அறையிலிருந்தே அந்த கால்வாய்க்கான முழுமையான திட்டத்தை வகுத்தார். அவர் திட்டத்துக்கு ஆதரவு தந்த நிறுவனம், அவரையே கட்டுமானத் தலைவராக நியமித்து அதைக் கட்டித்தரும்படி பணித்தது.
“வேதனைகளைச் சாதனைகளாக மாற்றுங்கள்” எனும் சுய முன்னேற்ற புத்தகத்திலும் இக்கதையை எழுதியிருந்தேன்.
இரவு மெர்குரே எனும் பிரமிட்டுக்கு அருகில் உள்ள விடுதியில் தங்கினோம். அந்த விடுதியும் பெரிய விடுதி. எங்கள் அறையக் கண்டுபிடிக்கவே அரை மணி நேரமாயிற்று. இத்தனைக்கும் எங்கள் வழிகாட்டியான, முகமது அவர்கள், “எந்தப் பிரச்னையாக இருந்தாலும் என்னை அணுகுங்கள். நான் பதினைந்து நிமிடம் காத்திருக்கிறேன்” என்றார். ஆனால் எங்களுக்கு பணம் பற்றாக்குறையாக இருந்ததால், எ.டி.எம். மையத்துக்குப் போய் பணம் எடுத்து வர வேண்டியிருந்தது. அதற்குள் அவர் சென்று விட்டார்.
எங்கள் புனிதப் பயணத்தின்போது அந்த ஒரு விடுதியில் மட்டுமே நாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களை சோதனைச் செய்தார்கள். (ஆனால் சென்னையில் நான் பேசும் பொம்மை நிகழ்ச்சி வழங்கப் போகும் பல விடுதிகளில் இப்படி சோதிப்பது வாடிக்கையாகிவிட்டது.)
முதல் மூன்று நாட்கள் சென்றதும் ஏதோ பத்து நாட்கள் கழிந்தது போல ஒரு மாயை. காரணம் நாங்கள் ஒவ்வொரு நாளும் நிறைய இடங்கள் பார்த்தோம். ஆனால் 11-ஆம் தேதி அன்று எப்படி இத்தனை நாட்கள் சென்றன என்று தோன்றியது. அவ்வளவு சடுதியில் நாட்கள் நகர்ந்து விட்டன. சரி... 11-ஆம் தேதி என்ன நடந்தது என்று பார்ப்போம். 👇
11.5.2017:
அன்று காலை பரிசுத்தக் குடும்பம் தங்கிய இடத்தில் உள்ள ஆலயத்துக்கு சென்றோம். அங்கே அவர்கள் தண்ணீர் எடுத்து அருந்திய கிணறைப் பார்த்தோம்.
எகிப்தில்
இயேசுவின் குடும்பம் தங்கிய இடத்தில் கட்டப்பட்ட ஆலயத்தை விட்டு வெளியே வந்த
பிறகு, எங்கள் குழுவினரில் ஒருவர் என்னிடம், “இந்த ஏரியாவிலதான் ஒரு மாசத்துக்கு
முன்னால ஐ.எஸ். தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பு நடந்தது. அதுல 44 பேர் இறந்துட்டாங்க!” என்றார்.
அச்சமுற்ற
நான், “இந்த ஏரியாவிலயா?” என்று ஆவலோடு கேட்டேன்.
அதற்கு
அவர், “இல்லேன்னா, வேற ஏரியாவில நடந்திருக்கும்!” என்றார் கூலாக!
மனதுக்குள்
வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்!
|
பிறகு அரசு நடத்தும் பிரம்மாண்டமான அருங்காட்சியகத்துக்கு சென்றோம். கடந்த 5,000 வருடங்களாக பயன்படுத்தப்பட்ட சுமார் 1,20,000 பொருட்கள் அங்கு உள்ளன. அக்கட்டடத்தின் முகப்புக்கு மேலே இருபுறமும் கிளியோபாட்ராவின் சிலைகளை வைத்துள்ளனர். காட்சியகத்தை முழூவதும் பார்க்க பல நாட்களாகும். எனவே வழிகாட்டி, அவர் பேசுவதை நாங்கள் மட்டுமே கேட்கும் வண்ணம், எங்கள் அனைவருக்கும் காதில் மாட்டிக்கொள்ள ஒரு வாங்கிக் கருவியைக் கொடுத்தார். அவர் கூடவே சென்றதால் முக்கியமான இடங்களை மட்டும் பார்த்து, விவரங்களைக் கேட்டவாறு வெளியேற வசதியாயிருந்தது.
பல மன்னர்களுடைய சிலைகள், அவர்கள் உபயோகித்த தங்கத்தாலான முகமூடிகள், ஃபாரோ மன்னன் பயன்படுத்திய பொருட்கள், பிரமிட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட மம்மிகள், பாப்பிரஸ் எனும் நாணலின் மீது எழுதப்பட்ட, வரையப்பட்ட ஓலைகள் போன்றவை பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தன.
பிறகு கைஸா பிரமிட்டுக்கு விரைந்தோம். மதிய வெயில். ஆனால் சில்லென்ற காற்று இதமாக உடலைத் தழுவியது. காரணம் நைல் நதி அங்கிருந்து 8 கிலோமீட்டர்தான். பிரமிட் பார்க்க ஒரு நபருக்கு நுழைவுச் சீட்டு ரூ.300. எங்களை அழைத்துச் சென்ற நிறுவனமே அதைச் செலுத்திவிட்டனர்.
இப்பிரமிட்டைக் கட்டிய வருடம் கி.மு. 2580. உயரம் 481 அடி. இது உலக அதிசயங்களுள் ஒன்றான பிரமிடுகளுக்குள்ளே பழமை வாய்ந்தது. 3,800 வருடங்களாக மனிதன் கட்டியவற்றுள் உலகிலேயே அதிக உயரமாக இது கருதப்பட்டது.
பெரிய பிரமிட்டுக்கு முன்னால் எங்கள் குழூவிலுள்ள அனைவரும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.
பெரிய பிரமிட்டுக்குள்ளே நுழைய தனியாக ஆளுக்கு ரூ.700 கட்ட வேண்டும். எங்களுள் இருபது பேர் மட்டும் உள்ளே நுழைந்து குறுகலான சுமார் 1,000 படிக்கட்டுகள் ஏறி நடுவில் உள்ள ஒரு அறைக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.
பெரிய பிரமிட்டுக்குள்ளே நுழைய தனியாக ஆளுக்கு ரூ.700 கட்ட வேண்டும். எங்களுள் இருபது பேர் மட்டும் உள்ளே நுழைந்து குறுகலான சுமார் 1,000 படிக்கட்டுகள் ஏறி நடுவில் உள்ள ஒரு அறைக்குச் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.
சில இடங்களில் படிக்கட்டுக்குப் பதில் கம்பிகள் மட்டும் இருந்தன. இன்னும் சில இடங்களில் அடிமைப் பெண் எம்.ஜி.ஆர். மாதிரி குனிந்து செல்ல வேண்டி இருந்தது. வெளிச்சமும் சொற்பம். பிரமிட்டைச் சுற்றி ஒட்டகச் சவாரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிறகு கைஸாவில் ஸ்ஃபிங்க்ஸ் இருந்த இடத்துக்கு அழைத்து செல்லப் பட்டோம். மனிதத் தலை. சிங்க உடல். இத்தலை காஃப்ரா எனும் ஃபாரோ மன்னனுடையது என்று நம்பப் படுகிறது. இது உலகிலேயே பழமையானது. பெரியதும்கூட. ஆனால் தயாரிக்கப்பட்ட தேதி தெரியவில்லை. நேரமின்மையால் புகைப்படம் எடுத்துக் கொண்டு உடனே புறப்பட்டோம்.
பிறகு பாப்பிரஸ் எனும் நாணலிலிருந்து எப்படி படம் வரையப்பட்டு காய வைக்கிறார்கள் என்பதை நேரிலேயே பார்த்தோம். 3 டி படம் போல் அதிலிருந்து இரண்டு வெவ்வேறு படங்கள் சில நொடிகளில் மாறியதைப் பார்த்து மலைத்துப் போனோம். (ஜானி: அதன் விலையைக் கேட்டவுடன் மீண்டும் மலைத்தோம்.)
மாலை நைல் க்ரூஸுக்காக ஸ்மார்ட் க்ரூஸ் எனும் 5 நட்சத்திர கப்பலில் பயணம் செய்தோம். இதில் முழூ நாளும் தங்கலாம். அல்லது இரவு 7 முதல் 10.30 மணிவரையும் தங்கலாம். 8 மணி முதல் உணவு பஃபே முறையில் எடுத்துக் கொள்ளலாம். 8.30 மணி முதல் பெல்லி நடனம், பாடல், டானூரா நடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன் நுழைவுக் கட்டணம் கப்பலுக்கு தகுந்த மாதிரியும், பருவ காலத்துக்கு தகுந்த மாதிரியும், பண்டிகை நேரத்துக்கு தகுந்த மாதிரியும் மாறுபடுகிறது. சுமார் 5,000 ரூ. முதல் 1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒரு குழுவாக செல்லும் பட்சத்தில் 50% வரை தள்ளுபடி உண்டு.
ஆனால் இருளில் அவர்கள் உடம்பில் சீரியல் ஒளி வைத்துக் கொண்டு ஆடும்போது இன்னும் சிறப்பாக இருந்தது. எங்கள் குழுவில் உள்ள சகோதரி ஜோதி பதிவு செய்த காணொலி இதோ...
பெல்லி நடனம் ஆடுபவரும், டானூரா நடனம் ஆடுபவரும் நம்மருகில் ஆடும்போது நம்மோடு சேர்த்து புகைப்படம் எடுக்கிறார்கள். மேலும் நமது குழுவைத் தனியாகவும் புகைப்படம் எடுப்பதுண்டு. அரை மணி நேரத்தில் புகைப்படம் தயார். ஒரு புகைப்படம் 5 $ என்ற கணக்கில் விற்கிறார்கள். நாம் வாங்கவில்லையென்றால் வருத்தப்படுவதில்லை. விலையைக் குறைப்பதுமில்லை.
பொதுவான செய்திகள்:
* ஜோர்டான் பயன்படுத்தும் நாணயம் ஜோர்தான் தினார். ஒரு தினார் 91 ரூபாய்க்கு சமம். இஸ்ரேலின் பணம் புதிய ஷெகல்ஸ். ஒன்றின் மதிப்பு ரூ.18-க்கு சமம். எகிப்தில் எகிப்து பவுண்டு. அது 3.60 ரூபாய்க்கு சமம். ஆனால் அனைத்து இடங்களிலும் அமெரிக்க டாலர்களை வாங்கிக் கொள்கிறார்கள். மீதி கொடுக்கும்போது அந்நாட்டு சில்லறைகளைக் கொடுக்கிறார்கள். (ஜானி: நம்ப நாட்டுப் பணத்துக்கு ஏன் இவ்வளவு குறைவான மதிப்பு?)
* நாங்கள் சென்ற எல்லா பேருந்து வண்டிகளிலும், விடுதிகளிலும் வைஃபி வசதியும், குளிர் சாதன வசதியும் இருந்தன. வண்டிகளில் பேசுவதற்கு ஒலிபெருக்கியும் இருந்தது. ஒலிபெருக்கி மூலம் அருட்தந்தை நாங்கள் செல்லுமிடத்தைப் பற்றிய விவிலியம் சார்ந்த கருத்துக்களை தமிழிலும், வழிகாட்டி அவ்விடத்தின் சரித்திரப் பின்னணியை ஆங்கிலத்திலும் கூறினார்கள்.
* இஸ்ரவேலில் அனைத்து ஆலயங்களிலும், மற்ற இடங்களிலும் நுழைவுக் கட்டணம் இல்லை. காசு கொடுக்காமல் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அந்த நான்கு நாடுகளிலும், ஆலயங்களுக்குள் செல்லும்போது காலணிகளைக் கழட்டத் தேவையில்லை. இந்தியாவிலும் அவற்றைப் பின்பற்றினால் வசதியாக இருக்கும்.
* முதலில் ஜோர்டான் சென்றோம். மாலையிலிருந்து இரவு வரை கடுங்குளிர். பிறகு இஸ்ரவேல். அங்கு சாதாரண குளிர். அடுத்து எகிப்துக்கு பயணம். அங்கு சாதாரண வெயில். கடைசியாக துபாய். நல்ல வெயில். பிறகு இந்தியாவுக்கு திரும்பினோம். கடும் வெயில்!
* நாங்கள் பயணத்தின்போது அறையின் கதவைத் திறக்க மின்னணு அட்டையை எப்படி உபயோகப்படுத்துவது, குளியலறைத் தொட்டிக்கு வெளியே தண்ணீர் வராமல் எப்படி குளிப்பது முதலியவற்றைக் கற்றுக் கொண்டோம்.
* அமெரிக்காவில் ஃப்லாரிடாவில் உள்ள ஆர்லாண்டோ எனும் இடத்தில் புனித பூமியிலுள்ள சில இடங்களின் பிரதிகளை (Replica) ஏற்படுத்தியுள்ளார்கள். அமெரிக்கர்கள் இஸ்ரவேலுக்கு வருவதற்குப் பதில் அவர்கள் நாட்டிலேயே பார்க்க இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
* வாலிபர்களுக்காக
ஏழு நாட்களில் மிதி வண்டி மூலமாக இஸ்ரவேல் பயணத்தை மேற்கொள்ள ஒரு நிறுவனம் ஏற்பாடு
செய்கிறது. ஹைஃபாவில் உள்ள கர்மேல் மலையிலிருந்து
நாசரேத்து, தாபர், யோர்தான் நதி, கப்பர்நகூம் வழியாக கலிலேயாக் கடல் வரை உள்ள இப்பயணத்தில்
தினமும் 30 முதல் 50 கிலோமீட்டர் வரை மிதி கட்டையை மிதிக்க வேண்டியிருக்கும்.
* 195 நாடுகளின் அங்கத்தினர்களைக் கொண்ட UNESCO (கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பேணும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு) எனும் அமைப்பு புனித பூமியின் 90% இடங்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. இஸ்ரவேலுடைய புனித பூமி சம்பந்தமான கொள்கையை எதிர்த்து அந்த அமைப்பு 2016-இல் தீர்மானம் வெளியிட்டது. ஆனால் அத்தீர்மானத்தை இஸ்ரவேலும், அதனைச் சார்ந்த நாடுகளும் கடுமையாக எதிர்த்தன.
இருப்பினும் 1967-இல், கிழக்கு எருசலேமையும் (பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தது), மேற்கு யோர்தான் கரைப் பகுதியையும் (ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது) இஸ்ரவேல் போர் மூலம் கையகப்படுத்திக் கொண்டது.
புனித பூமியைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
1) “நாங்கள் சென்ற போது
எங்கள் குழுவிலிருந்தவர்களின் மூன்று கைப்பேசி தொலைந்து விட்டது. இஸ்ரவேலில் திருடுபவர்கள் அவ்வளவு
சாமர்த்தியம். செய்தித்தாளை உங்க
பாக்கெட்டுக்கு அருகாமையில் பிடிச்சிருப்பாங்க.
அடுத்த நிமிடம் உங்க கைப்பேசி அபேஸ் ஆயிடும்!” என்று அங்கு போய் வந்த ஒரு
நண்பர் கூறினார்.
இந்தச்
செய்தியைச் சிலருடன் பகிர்ந்து கொண்டோம்.
ஆனால் இஸ்ரவேலில் எங்களைச் சூழ்ந்து கொள்ளும் அளவுக்கு கூட்டமே இல்லை. எங்கள் குழு எந்த பொருளையும் திருடு
கொடுக்கவும் இல்லை.
2) “மே மாசமா
போறீங்க? வெயில் வாட்டி எடுக்குமே?
பருத்தித் துணிகளையே அணியுங்க!” சிலர் இப்படி யோசனைக் கூறினர்.
உண்மையில்
ஜோர்தானிலும், இஸ்ரவேலிலும் குளிர். நாங்கள் மாலை வேளைகளில் கம்பளிச் சட்டை அணிய
வேண்டியிருந்தது. எகிப்தின் குறைவான வெயில் எங்களைத் தாக்கவேயில்லை.
3) “புனித பூமியில்
சாப்பாடு ரொம்ப மோசம். காரமே
இருக்காது. சள்ளுனு இருக்கும். நீங்க ஊறுகாய் பாட்டில் வாங்கிட்டுப் போனா
தப்பிச்சீங்க. அதைப் போட்டு சாப்பிட்டா
கொஞ்சமாவது ருசியாயிருக்கும்!” இப்படியும் சிலர் கூறினர்.
ஆனால்
நாங்கள் சாப்பிட்ட உணவு எல்லாமே சுவையாக இருந்தது. முக்கியமாக காலை மற்றும் இரவு உணவு நாங்கள்
தங்கிய விடுதியில் ஏற்பாடு செய்ததால், எங்களுக்குப் பிடித்த உணவை அளவின்றி எடுத்து
உண்டோம். நல்லவேளை, ஊறுகாய் எடுத்துச்
செல்லவில்லை.
4) “என்ன புனித
பூமியா? அங்கதான் ஒரே சண்டையா
இருக்கே? சமீபத்தில கூட எகிப்தில
தீவிரவாதிகள் வெடிகுண்டு வெடிச்சாங்களே?” இப்படிச் சிலர் நம்மைப் பயமுறுத்தினர்.
விபத்துகள்
எல்லா இடங்களிலும் நடக்கத்தான் செய்யும்.
அதற்கு பயந்தால், நாம் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. (ஜானி: ஆபத்து வருகிறதென்று துணியாமல்
இருப்பதுதான், பெரிய ஆபத்து! The person who doesn't take any risk
is facing a bigger risk!)
* ஞாயிறு பள்ளி படிக்கும்போது நமக்கு சொல்லிக் கொடுத்த கிறித்தவக் கதைகளின் பின்னணிக் காட்சிகள் எப்படி இருக்கும் என்று மனக் கண்கள் மூலம் பார்த்திருப்போம். அப்படிப் பார்த்தவையும், நாம் நேரில் சந்தித்த காட்சிகளும் ஒருங்கிணைந்து காணப்பட்டனவா என்றால், 90 சதவீதம் அதற்கு பதில் எதிர்மறையானதாகவே இருக்கக் கூடும்.
அதற்குக் காரணம், அங்கிருந்த அநேக இடங்கள் கிறித்தவர்களுக்கும், முகமதியர்களுக்கும் இடையே மாறி மாறி நடந்து வந்த போர்களே. மூன்றாம் நூற்றாண்டின் அரசனான கான்ஸ்டன்டைன் அரச குடும்பமும், 11 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த ஐரோப்பா நாட்டின் பல குருஸேடர்களும் முக்கியமான சரித்திரப் புகழ் படைத்த கிறித்தவ ஸ்தலங்களைப் பாதுகாப்பதிலும், புதிய ஆலயங்கள் கட்டுவதிலும் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள்.
அவர்கள் கட்டிய ஆலயங்கள் காலத்தால் அழிக்கப்பட்டாலும், அதற்கு மேலேயே புதிய ஆலயங்கள் கட்டப்பட்டு அல்லது புதுப்பிக்கப்பட்டு இன்றளவும் கம்பீரமாக நிற்கின்றன. அப்படிக் கட்டப்படாத நிலை ஏற்பட்டு இருக்குமாயின், பிற்காலத்தில் அவை பெரிய விடுதிகளாகவோ அல்லது அடுக்கு மாடி வீடுகளாகவோ மாறியிருக்கக் கூடும்.
எனவே பழைமை வாய்ந்த கிறித்தவ ஸ்தலங்களை அந்த நிலையிலேயே காப்பாற்ற முடியவில்லை என்றாலும், அந்த இடங்களையாவது காப்பாற்ற முடிந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.
எனவே பழைமை வாய்ந்த கிறித்தவ ஸ்தலங்களை அந்த நிலையிலேயே காப்பாற்ற முடியவில்லை என்றாலும், அந்த இடங்களையாவது காப்பாற்ற முடிந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்.
12.5.2017:
அடுத்த நாள் மதியம் 12.05 மணிக்கு கெய்ரோவில் விமானம் ஏறினோம். விமானத்தில் பறப்பதற்கு முன்பு விமான நிலையத்தில் அருட்தந்தை சின்னப்பாவுடன் நேர்காணல் கண்டதை இக்காணொலியில் பதிவு செய்துள்ளேன்.
அன்று மாலை 5.35 மணிக்கு துபாயை அடைந்தோம். எங்கள் குழுவும் (14 பேர்), மற்றொரு குடும்பமும் (3 பேர்), துபாயில் சில நாட்கள் சுற்றிப் பார்க்க ஏற்பாடுகள் செய்திருந்ததால், மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம். (ஜானி: உங்களுக்கும் டாட்டா! பை!!)
நன்றி:
சில புகைப்படங்கள் இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டன. அவர்களுக்கும், இந்த வலைப்பதிவை உருவாக்க ஊக்கமளித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
பின்னுரை:
ஒவ்வொரு வருடமும் புனித பூமிக்கு 4 இலட்ச பக்தர்கள் வருவது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? ஆம்! கடந்த 2000 வருடங்களாக பல கோடி யாத்திரிகர்கள், இஸ்ரவேலுக்கு வந்து, பார்த்து, பரவசப்பட்டு சென்றிருக்கின்றனர். அவர்கள் மொழி, நிறம், நாடு, மதம் கடந்து வந்தவர்கள். காரணம் இந்நாடு யூத மற்றும் முகமதியர்களுக்கும் புனித நாடாக இருப்பதுதான்.
ஆனால் முக்கியமாக உலகில் பெரும்பான்மை மதமான கிறித்தவர்களுக்கு புனித நாடாக இருப்பதால் அதிகமதிகமான கிறித்தவர்களும், கிறித்தவ நம்பிக்கையுடைய மற்ற மதத்தினரும் பல நாடுகளிலிருந்து வந்து, பார்த்து, தங்கள் விசுவாசத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்.
பத்து நாட்களில் அறுபதுக்கும் அதிகமான இடங்களைப் பார்த்தோம். போகுமிடங்களில் எல்லாம் இந்தியாவிலிருந்து வந்த ஐந்து குழுக்களையும், பல நாடுகளிலிருந்து வந்த கிறித்தவர்களையும் பார்க்கவும், பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இயேசு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்ட யோர்தான் நதி, அவர் தண்ணீரில் நடந்த கலிலேயாக் கடல், அவரை அடைத்து வைக்கப்பட்ட சிறை, சிலுவையில் அறையப்பட்ட இடம், அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த கல்லரை போன்ற இடங்களைப் பார்க்கும்போதும், அங்கு பிரார்த்தனை ஏறெடுக்கும்போதும் நம்மையறியாமல் இயேசுவின் மீது அன்பு கூடுகிறது.
சிலர் இப்பயணத்தின்போது உணர்ச்சி வயப்பட்டிருக்கின்றனர். கிறித்தவ மதத்தில் குறைந்த ஈடுபாடுள்ளவர்களுக்கும் இப்பயணம் ஒரு புதிய ஆன்மீக அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமேயில்லை!
இயேசு நடந்த இடத்தில் நடந்தால் போதாது. அவர் சொன்ன வழியில் நடக்க வேண்டும். அதைத்தான் அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.
இயேசு எல்லா இடத்திலும் இருக்கிறார் என்பது உண்மை. ஆனால் நம்முள்ளத்தில் இருக்கிறாரா என்பதுதான் முக்கியம். இந்த புனித பயணம் இயேசு நம்முள்ளத்தில் வந்து தங்க பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் நம் விசுவாசம் காரையால் பூசப்பட்டதுபோல் உறுதியாகிவிடும்.
மேலும் அறிமுகமில்லாத ஐம்பது பேருடன் பத்து நாட்கள் ஐக்கியத்தோடு பழகியது உண்மையிலேயே மோட்சத்தில் நாம் வாழப் போகும் வாழ்க்கைக்கு ஒரு மாதிரி போலத் தோன்றுகிறது. மீண்டும் சந்திப்போம்.
ஜானி: ஆமா, உலகம் ரொம்ப சிறிசுதான்!
I request you to go through my
website and other blogs:
www.besteventschennai.com
(As Ventriloquist and Event Manager)
MY BLOGS
http://ventshanthakumar.blogspot.com/
(My interview as Ventriloquist)
http://saarang2010.blogspot.com/2010_02_01_archive.html (Photos of my workshop in Saarang
2010 at IIT, Chennai)
http://myholytour.blogspot.in/ (About our tour to Holy Land)
http://adversitiesintoopportunities.blogspot.in/ (On self development, A must read)
http://feelhappyever.blogspot.in/ (Tips to get happiness everyday)
http://dollshanthakumar.blogspot.in/ (My humorous experiences as
Ventriloquist)
http://hypnosisforselfdevelopment.blogspot.in/
(Self Hypnosis for self development)
--ooOoo--
P
R O F I L E
Name
: G.A. Santhakumar
Act : Ventriloquist cum Magician cum Puppeteer
Experience : 20 years
Languages used :
Tamil, English and little Hindi
Qualifications : M.A., B.L., CAIIB
Performed : More than 8,000 shows, including
performances in U.A.E.-10
Schools, Seychelles-Tamil
Mandram, Kuwait-Tamil Engineers
Forum, Malaysia-Writers’
Conference and Singapore-Church.
Timings : Usually I do Ventriloquism
with four props, viz. Boy, White
Talking Board, Mask and Girl & Monkey for
40 minutes
+
magic for 20 minutes
Performed
in : In
all the TV channels except Animal Channel.
Ex: Sun TV, Vijay, Jaya, Pothigai, Raj,
Makkal and Chutti
Workshops : IIT (Chennai twice), Bits Pilani
(Goa) & NIT (Trichy twice)
Important
clients : Microsoft, Infosys, Wipro,
TCS, Isoft, Mphasis, Oracle, First
Source, Accenture, Visteon, Mind Tree, Tuticorin
Sterlite,
MRF, Apolo Tyres,
L&T, Dalmia Cements, Delhi Tamil
Sangam, Anna
University, MMC, Sathyabama University,
Arunai Eng.
College, World Bank, RBI, SBI, Citi, Bank of
America, Indian
Bank, Standchart, IDBI, NABARD, Canara,
Sriharikotta Space
Centre, GAIL, BHEL, BP, Kalpakkam
Atomic Centre
& Coast Guard @ ship!
Additions
: I can do skits and dance through stage puppets show
I also perform dance through stringed
puppets
I
conduct workshop to teach ventriloquism
Articles
published : English: The Hindu, Indian Express, Ergo & Deccan
Chronicle
Tamil: Vikatan, Dinamani Kathir,
Dinamalar, Amudhasurabi
& Ladies Special; Telugu:
Eenaadu
Quotes from
them : “Humor is the choice through his voice” (Hindu)
Banker by profession & ventriloquist by
passion!
Other
activities : Worked in a nationalized Bank for 35
years;
Wrote 29 books (26 in English & 3 in
Tamil)
Trainer on HR and
Banking topics in Engineering Colleges
CONTENTS & VIDEO
LINKS
Contents :
·
Clean
jokes, songs and comedy quiz
·
Perform
the show to suit the audience
·
Stressing
the importance of positive thinking.
·
Can
add any topic on HR or social issues, like
Environment, ban on plastic, smoking and drinking.
·
My
favorite subject:
How to convert adversities into opportunities?
Doll talking show is a unique one! And
humor is the best medicine!
Some call
him a Doctor because he heals many people through humour therapy!
--ooOoo--































































Thanks for blogspot as I could upload the material and photos in half an hour.
ReplyDeleteYour article on Jesus' places was excellent. I read the other articles too which too were impressive. Your profile, of course, is awesome.
ReplyDeleteSreenivasulu Kondannagari, Bangalore.
Thanq very much for your encouraging words, Mr Sreenivasulu sir!
ReplyDelete